நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் நடித்த மை டியர் லிசா திரைப்படம் இன்று வெளியானது. தான் நடித்த மற்றும் பிற திரைப்படங்களை தியேட்டரில் சென்று நேரில் பார்த்து, படம் முடிந்தவுடன் வெளியே வந்து ரிவ்யூ கொடுக்கும் வழக்கம் கூல் சுரேஷுக்கு உண்டு. இவருக்காக தியேட்டர் வாசலில் யூடியூபர்கள் காத்திருப்பர். இந்நிலையில் இவரது படமான மைடியர் லிசா இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் உள்ளூரில் இல்லாமல் வெளிமாநிலத்தில் இருப்பதால் ரசிகர்களுக்கும், யூடியூபர்களுக்கும், படக்குழுவினர்களுக்கும் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரினார்.


பகிரங்க மன்னிப்பு !




அந்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது, ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்… யூட்யூபர்ஸ் என்னை முக்கியமாக மன்னித்து விடுங்கள். இன்று நான் ஓரளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு நீங்கள் தான் முக்கிய காரணம். நான் மன்னிப்பு கேட்பதற்கான காரணம் நான் நடித்த திரைப்படம் மை டியர் லிசா இன்று வெளியாகி உள்ளது என்று கூறி "வெந்து தணிந்தது காடு மைடியர் லிசாவுக்கு வணக்கத்தை போடு" என தனது ஸ்டைலில் கூறினார். அதைத் தொடர்ந்து, மை டியர் லிசா படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து கூறினார்கள். நீங்கள் நடிக்காத திரைப்படத்திற்கு எல்லாம் சென்று ரிவ்யூ கொடுத்து வருகிறீர்கள்.


ஆனால் நீங்கள் நடித்த திரைப்படத்திற்கு வர மாட்டீர்களா என்று கூறினார்கள். அவர்கள் கூறுவதெல்லாம் சரிதான். நான் இன்று வெளிமாநிலத்தில் உள்ளதால் என்னால் வர முடியவில்லை. ஆனால் நான் மை டியர் லிசா திரைப்படத்தை பார்த்துவிட்டேன். படம் அருமையாக உள்ளது. முக்கியமாக என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. படத்தை அனைவரும் பாருங்கள்.  படத்தில் நான் மட்டும் இல்லை, சிங்கம் புலி அண்ணன் மற்றும் பல கலைஞர்கள் நடித்துள்ளனர். மை டியர் லிசா ஒரு பேய் படம்.பார்க்கும்போதே பயங்கரமாய் இருக்கும். அனைவரும் பயந்து பார்ப்பீர்கள். அதே நேரத்தில் எங்களை பார்க்கும் பொழுது மனம் விட்டு சிரித்து பார்ப்பீர்கள். அந்த அளவுக்கு ரசித்து பார்க்கக் கூடிய படமாக மைடியர் லிசா இருக்கும்.


எனது வாழ்வின் ஹீரோ விஜய் வசந்த்!




இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருப்பவர் நடிகர் விஜய் வசந்த். நடிகர் விஜய் வசந்த் படத்தில் மட்டும் இல்லை; பல மக்களின் வாழ்விலும் கதாநாயகனாகவே இருக்கின்றார். கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி ஆகவும் இவர் உள்ளார். இந்த படத்தின் மூலம் ஒரு ஸ்வீட்டான ஹீரோவாகவும் வலம் வருவார். இவர் படத்தில் மட்டும் ஹீரோ இல்லை எனது வாழ்விலும் ஹீரோ தான் எனது குடும்பத்திற்கு பல உதவிகள் செய்திருக்கிறார் என்று கூறி விஜய் வசந்தின் அட்டைப்படத்திற்கு முத்தமிட்டு ஐ லவ் யூ கூறினார். மேலும் அவரது பாணியில் "வெந்து தணிந்தது காடு விஜய் வசந்த் சாருக்கு வணக்கத்தை போடு" என்று கூறினார். மேலும் காட்டேரி, பொய்க்கால்குதிரை போன்று இன்று வெளியாகும் பிற படங்களை வாழ்த்தி, அதற்கு நான் இங்கிருந்தே எனது ஆதரவை தெரிவிக்கின்றேன் என்று கூறினார். 


பிற படங்களுக்கும் ஆதரவு:




இன்று வெளியாகும் திரைப்படங்களின் இயக்குநர்கள் யாரும் வருந்த வேண்டாம்…எங்கு இருந்தாலும் கூல் சுரேஷ் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே தான் இருப்பேன்‌ என்றார். மேலும் ரசிகர்களிடம், நீங்கள் வருந்த வேண்டாம்.மீண்டும் நான் கண்டிப்பாக தியேட்டர் முன்பு வந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுப்பேன். படத்தில் நடித்த பிற கலைஞர்களுக்காக குரல் கொடுப்பேன். படத்தை பாருங்கள்… முக்கியமாக இந்த படத்தின் ஹீரோயினுக்காகவே படத்தை பாருங்கள். இந்த திரைப்படத்தில் நான் மட்டும் இல்லை, அனைவருமே அழகாக இருப்பார்கள். பயந்து போய் யாரும் படம் பார்க்காதீர்கள்.அடுத்த படத்தின் ரிவ்யூவுக்கு நான் தியேட்டருக்கு வருகிறேன். மேலும் யூடியூபர்கள் அனைவரும் எனக்காக காத்துக் கொண்டே இருப்பீர்கள். அதற்காக மிகவும் நன்றி. நான் வர முடியாத சூழ்நிலை என்று உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்த வீடியோவை நான் வெளியிட்டேன். எல்லா பட்டத்திற்கும் நீங்கள் ஆதரவு தெரிவிப்பது போல் இந்த படத்திற்கும் நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தில் இருந்தாலும் இன்று கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்து விடுவேன்.


சக நடிகர்களுக்கு எச்சரிக்கை !


நான் முக்கியமாக ஒன்று கூறுகிறேன்…படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் படத்தை நிச்சயமாக பார்க்க வேண்டும்; பார்த்து அதை ஒரு வீடியோவாக வெளியிட வேண்டும்.யாராவது ஓசியில் ப்ரிவ்யூ ஷோ போடுவார்கள், அதில் நாம் படம் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம். வாங்கின காசுக்கு தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க வேண்டும்.நாம் தான் நாம் நடித்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.புரிகிறதா..? அதனால் மறக்காமல் இன்று நீங்கள் அனைவரும் இன்று இந்த படத்தை பார்க்கிறீர்கள்...அதை வீடியோவாக வெளியிடுகிறீர்கள்… "படத்தில் நடித்தவர் யார் யார் என்று எனக்கு தெரியும்…நீங்கள் வீடியோ போடவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அதற்கு அப்புறம் கூறுகிறேன்" என்று ஆவேசமாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.