குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் stress buster ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்தது.


இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே  இல்லாமல் இருந்தது. குக் வித் கோமாளி கிடைத்த புகழுக்கு பிறகு புகழ் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சந்தானத்தின் 'சபாபதி', அஜித்தின் 'வலிமை', அஸ்வின் நடித்த என்ன சொல்லப் போகிறாய், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார், மேலும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.






புகழ் இப்போது தனது கேரியரில் அடுத்த கட்டத்திற்கு சென்று ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிருகக்காட்சிசாலை காப்பாளராக நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவருக்கு ஜோடியாக சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் நாயகியாக நடித்த ஷிரின் காஞ்சவாலா நடிக்க இருக்கிறார். 


'மிஸ்டர் ஜூ கீப்பர்' திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி (இன்று) முதல் ஊட்டியில் படப்பிடிப்பு துவங்குகிறது, அதன்பின்னர் இந்த படக்குழு பிலிப்பைன்ஸுக்குச் செல்ல இருக்கிறது. புலியை உள்ளடக்கிய நகைச்சுவை திரைப்படம் என்பதால் நிஜமான புலியுடன் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் நிஜ புலியுடன் படம் எடுக்க அனுமதி இல்லாதநிலையில் பிலிப்பைன்ஸில் ஷூட்டிங் நடத்த இருக்கின்றனர். இந்தப்படத்தை மாதவன்-சினேகா நடித்த 'என்னவாலே' மூலம் இயக்குநராக அறிமுகமான ஜே. சுரேஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்க இருக்கிறார். 'ஷமிதாப்' புகழ் பாலிவுட் ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண