குக் வித் மோமாளி சீசன் 5:
தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால், அதில் விஜய் டீவிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான்.
குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. நடந்து முடிந்த நான்கு சீசன்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் - 5 விரைவில் தொடங்க உள்ளது.
கோமாளிகள் யார்?
இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அண்மையில் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இவருக்கு பதில் யார் நடுவராக இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் ப்ரோமோ வெளியானது.
அதில், செஃப் தாமுவுடன், மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடுவராக செயல்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. அதோடு, இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கோமாளிகள் யார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்ஷன் ஆகியோர் தொகுத்து வழங்கும் நிலையில், குரோஷி, சுனிதா, புகழ், ராமர் ஆகியோர் கோமாளிகளாக களமிறங்குவதாக ப்ரோமோ மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்!
Ilayaraaja: கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை கேலி செய்த இளையராஜா!