Cars Waiting Period: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், டொயோட்டாவின் குறிப்பிட்ட மாடலுக்கு அதிகபட்சமாக 13 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் உள்ளது.


கார்களுக்கான வெயிட்டிங் பீரியட்:


அதிகரித்து வரும் கார்களுக்கான தேவைக்கேற்ப, பல்வேறு மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில கார்களை நேரடியாக ஷோ ரூமிற்கு சென்று கையோடு வாங்கி வர முடியாது. ஆர்டர் செய்து குறிப்பிட்டு காலம் வரை காத்திருந்து வாங்க வேண்டும். இது வெயிட்டிங் பீரியட் என அழைக்கப்படும்.  தேவை அதிகமாக இருக்கும்போது, ​​உற்பத்தி திறனை விரைவாக அதிகரிப்பது சாத்தியமில்லை. எனவே அதனை தயாரித்து வழங்குவதற்கான இந்த கால இடைவெளியை தான், ஆட்டோமொபைல் துறையில் வெயிட்டிங் பீரியட் என தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இந்திய சந்தையில் எந்த கார் மாடல்களுக்கு அதிகபட்ச வெயிட்டிங் பீரியட் உள்ளது என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


01. Toyota Innova Hycross: 


டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடலுக்கு தான் தற்போதைய சூழலில் நாட்டிலேயே அதிக காத்திருப்பு காலம் பின்பற்றப்படுகிறது. அந்த மாடலில் உள்ள ஹைப்ரிட் வேரியண்ட் காருக்கான காத்திருப்பு காலம் 60 வாரங்களாக உள்ளது. இந்த மாடலானது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.19.77 லட்சம் தொடங்கி - ரூ.30.68 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


02. Mahindra Thar:


மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரின் 4X2 வேரியண்டை பெற, வாடிக்கையாளர் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தார் கார் மாடலின் விலை ரூ.11.25 லட்சம் தொடங்கி ரூ. 17.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


03. Toyota Innova Crysta:


டொயோட்டா நிறுவனத்தின் கிரிஷ்டா டீசல் கார் மாடலுக்கான வெயிட்டிங் பீரியட், 6 மாதங்களில் தொடங்கி 9 மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 2.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆனது, 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.19.99 லட்சம் தொடங்கி ரூ.26.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


04. Mahindra XUV 700:


மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி கார் மாடலின், AX7 LAWD வேரியண்டிற்கான  காத்திருப்பு காலம், 9 மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2.2 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை, ரூ.13.99 லட்சம் தொடங்கி ரூ.26.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


05. Mahindra Scorpio N:


மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் கார் மாடலுக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 9 மாதங்களாக உள்ளது. 2.2 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.17.20 லட்சம் முதல் ரூ.31.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


06. Toyota Urban Cruiser Hyryder: 


டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூசர் ஹைரைடர் மாடலின் ஹைப்ரிட் வேரியண்டிற்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் பெட்ரொல் 


07. Hyundai Exter:


ஹுண்டாய் எக்ஸ்டர் கார் மாடலுக்கான காத்திருப்பு காலம் 6 முதல் 7 மாதங்களாக உள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 5 ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் இணக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.40 லட்சம் தொடங்கி 12.88 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI