உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த 5 மாநில தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக பெரும்பான்மையை நிரூபித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்ளை போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும். அது 2024 ஆ? 2026 ஆ? தெரியவில்லை. இந்த 5 மாநில தேர்தலில் பாஜக 5 ல் 4 மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி என யாரும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
தொடர்ந்து, பாஜகவின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக கொரோனாவை கட்டுப்படுத்தியதே வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்