குக் வித் கோமாளி ஷிவாங்கி 10 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்ததோடு அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ஒவ்வொரு ஷோக்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்னத்திரை சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு stress buster-ஆக உள்ளது. இதில் வரும் கோமாளிகளின் அலப்பறைகளைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதில் புகழ் மற்றும் ஷிவாங்கி அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது. அண்ணன் – தங்கை பாசத்தை காமெடியாக வெளிப்படுத்துவதே இவர்களின் தனிச்சிறப்பாக உள்ளது.
குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கேற்றிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் மக்களிடம் மிகுந்த பிரபலமானர். குக்வித் கோமாளி சீசன்1,சீசன் 2 மற்றும் சீசன் 3 என கலக்கிவருகிறார். அதிலும் சீசன் 2 வில் அஸ்வின் மீது க்ரஸ்ஸாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்துள்ளார் ஷிவாங்கி. இதோடு நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளா உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஷிவாங்கி. இப்படி குக் வித் கோமாளி சீசன் 3 மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வரும் ஷிவாங்கி பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
இன்ஸ்டாவில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ போடுவது, தன் அம்மாவுடன் சேர்ந்து ஷாப்பிங் போகும் போது செய்யும் அலப்பறைகள் என ஒவ்வொன்றையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுவரும் வழக்கத்தைக் கொண்டிருப்பார் ஷிவாங்கி. இந்த வரிசையில் தான், தற்போது உடல் எடையைக்குறைத்து தான், ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் உடல் எடையை 10 கிலோவாக குறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதோடு இயற்கையான முறையில் மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையைக்குறைத்து இருக்கிறார் ஷிவாங்கி. மேலும் உடல் எடையைக்குறைக்க அதிக காலம் எடுத்துக்கொண்டாலும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகக்குறிப்பிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் இப்படி எடையை குறைச்சிட்டீங்களே? உங்களால மட்டும் தான் இப்படி செய்ய முடியும் என்பது போன்ற கமெண்ட்களையும், லைக்குகளையும் சோசியல் மீடியாவில் தெறிக்க விடுகின்றனர். பலரது வீடுகளில் செல்ல பிள்ளையாக இருக்கும் ஷிவாங்கி தன்னுடைய முயற்சியினாலும இயற்கையான முறையிலும் 10 கிலோ எடையைக்குறைத்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.