நெல்லை மாவட்டத்தில் டிஎன்பிசி தேர்வுகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ எஸ் அதிகாரி பாலச்சந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவைச்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள், விடைத்தாள் வைக்கும் அறைகளை ஆய்வு செய்து பார்வையிட்டார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, 



ன்


குரூப் 2, குரூப் 2 A தேர்வுக்காக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  காலி பதவியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுத்து வருகிறது, ஓ.எம்.ஆர் சீட் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் முறைகேடுகளை முழுவதும் களைய டிஎன்பிஎஸ்சி ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்படுவதால் இனிவரும் காலங்களில்  முறைகேடுகள் நடைபெறாத வகையில் தடுக்கப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் உட்பகுதி  முன் பின் பகுதியில்  கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற உள்ளது, விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களை டிஎன்பிஎஸ்சி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையின்  மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினாலே மிகச் சிறப்பான பங்களிப்பை அவர்கள் ஏற்படுத்தமுடியும்,


ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வெளியிடப்பட இருக்கிறது, மார்ச் மாதம் மத்தியில் அல்லது இறுதியில் அறிவிப்பு வெளியிட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளுக்கு என்ன மாதிரியான பாடத்திட்டத்தில் இருந்து  கேள்விகள் கேட்பது என்பது குறித்தான விவரங்களை தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது, குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெறும்,  அரசின் பிற தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து , தேதிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மீது  தேர்வர்களுக்கு தற்போது மிகுந்த நம்பிக்கை எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,




ஓஎம்ஆர் சீட்டில் அழியும் மை வைத்து எழுதி திருத்துதல் போன்ற பிரச்சினைகளை களைய ஓஎம்ஆர் சீட் மற்றும் personal data ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரித்து விடுகின்ற காரணத்தால் எந்த ஓஎம்ஆர் சீட் எந்த நபருடையது என்பதை கம்பியூட்டர் கோடிங் மூலமே கண்டுபிடிக்க முடியும், இதனால் வழியிலேயே ஓஎம்ஆர் சீட் திருத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில் திருத்தம் செய்யப்படும் பிரச்சனைகளை தவிர்க்க விடைத்தாள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கடந்த 6 மற்றும் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது, அதேபோல விடைத்தாள்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் குறைபாடுகளை களைவதற்காக லாரியின் உட்புறத்தில் கேமரா பொருத்தப்பட்டு அதனை தேர்வாணையம் மூலம்  நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு தேதி அறிவிப்பு கலந்தாய்வு வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதார் அட்டையுடன் ஓ.டி.ஆர் எண்ணை இணைப்பதற்கான  கால அவகாசம் 28 ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது, மீண்டும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.