விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றது ’குக் வித் கோமாளி என்பதும் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தொடர்களுக்கு பின்பு இதே சீசன் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாக தெரிவித்து இதற்கான முதல் ப்ரோமோவும் வெளியிடப்பட்டது. 


 






பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரத்தில் இருந்து 'குக் வித் கோமாளி 3’ தொடங்கும் என்றும் செய்திகள் பரவி வந்தன. கடந்த இரு சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு புகழ்,சிவாங்கி, வெட்டிக்கிளி பாலா முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது தொடங்க இருக்கும் 3 வது சீசனில் புகழ் பங்கேற்கவில்லை. அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் குக் வித் கோமாளி 3 சீசனில் ஓரிரு எபிசோடுகள் சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. 




சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் புகழ் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முதல் சீசனில் ரம்யா பாண்டியனோடும், இரண்டாம் சீசனில் பவித்ராவுடனும் இவர் சேர்ந்து செய்த காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது. ஷிவாங்கி மற்றும் புகழுக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், வழக்கம்போல் நிகழ்ச்சியில் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, வெட்டிக்கிளி பாலா, மூக்குத்தி முருகன், கலக்க போவது யாரு புகழ் குரேஷி ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது. தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து எந்தவொரு அதிகபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. 




 இந்த சீசனுக்கான ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தநிலையில் தற்போது தீடிரென நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இரண்டாம் கட்ட ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதற் கட்ட ஷுட்டிங் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


விரைவில் குக் வித் கோமாளி 3 விஜய் டிவியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் தற்போது மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண