விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்துக் கொண்டு உள்ளார்கள்.


இந்தநிலையில், குக் வித் கோமாளி சீசன் 3  வீடியோ ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசிய சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், செப் வெங்கடேஷ் பட் ' சொன்னா நம்ப மாட்டீர்கள். குக் வித் கோமாளி பார்த்துதான் நான் கர்ப்பமாகி இருக்கேன்". அதற்கு ரோஷினி வாவ் என்று சொல்ல, தொடர்ந்து வெங்கடேஷ் பட் பேசினார். எட்டு வருசமா எனக்கு குழந்தை இல்லை. அப்ப செக் அப்காக போயிருந்தேன். ஒரு லேடி குழந்தையோட வந்து என்கிட்ட  சொன்னாங்க. நான் கடைசி வருஷம் இதே ட்ரீட்மெண்ட்க்காக வந்து இருந்தேன். எங்களுக்கு அப்ப குழந்தை இல்ல. குக் வித் கோமாளி பார்த்தேன். என்னுடைய கவலை எல்லாம் மறந்து எனக்கு குழந்தை பிறந்துச்சு. நீ கண்டிப்பா அத பாரு உனக்கு குழந்தை பிறக்கும். நீங்க சொன்னா நம்ப மாடீங்க அந்த பொண்ணுக்கு இப்ப குழந்தை இருக்கு. என்று தெரிவித்தார். 


இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களின் வெங்கடேஷ் பட் பேசிய காட்சியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அந்த மீம்ஸ் இதோ உங்களுக்காக :


























ஒரு காலத்தில் முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும் என்ற 90'ஸ் கிட்ஸ் நம்பிக்கை பொய்த்து, தற்போது குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது போல..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண