வாள்வீச்சு வீராங்கனைக்கு உதவிய நடிகர் சசிகுமார்
ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி , டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொள்ள பவானி தேர்வாகியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய வாள் வீச்சு வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவானி .

ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் 👍
Feel #Proud n #Happy @IamBhavaniDevi 🎉🎉👍🎖#TokyoOlympics 🤺 https://t.co/N2kyvNqzWn
— M.Sasikumar (@SasikumarDir) March 16, 2021

பவானி தேவி ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கு ஊக்கமாய் இருந்தவர் நடிகர் சசிகுமார். 6 வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் நடந்த வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்தபோது நடிகர் சசிகுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். பவானி வெற்றி பெற்றபொழுது சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை பகிர்ந்து உள்ளார் .
நாமும் நம் வாழ்த்துக்களை பவானி தேவிக்கு தெரிவித்துக் கொள்ளவோம் .