ஹார்ட்த்ரோபாக வலம் வருபவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின். விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியில் ஷிவாங்கி, புகழ், பாபா பாஸ்கர், ஷகீலா மற்றும் பலர் பங்குபெற்று பட்டையைக் கிளப்பி வருகின்றனர். ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ஜோடி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடி . அஸ்வின் சமீபத்தில் Behindwoods Golden Icon Award-ஐப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அஸ்வின் பிகில் பட நாயகியான ரேபா மோனிகா ஜானுடன் இணைந்து "குட்டி பட்டாசு" என்ற ஆல்பத்தில் நடித்திருக்கிறார். இந்தப் பாடலின் டீசர் நேற்று வெளியாகி ஒரு மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது. சோனி இந்த ஆல்பத்தை தயாரித்திருக்கிறது, சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார் . அ.பா.ராஜா இந்தப்பாடலை எழுதியிருக்கிறார் , சந்தோஷ் தயாநிதி இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் .

Get ready to groove 🕺🏻#KuttyPattas @SonyMusicSouth @TheRoute @noiseandgrains @i_amak @Reba_Monica @DhayaSandy @Venki_dir @iamSandy_Offl @Jagadishbliss pic.twitter.com/uHN3ubWdVT
— Ashwin Kumar Lakshmikanthan (@i_amak) March 24, 2021

டீசரைப் பார்ப்பதற்கு ஒரு கல்யாணத்தில் நடக்கும் கலாட்டாவைப் போல் தெரிகிறது. வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் வியூஸைப் பெற்றிருக்கிறது இந்த ஆல்பம் டீசர்.