கூவத்தூர் விவகாரம்:


சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்..க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும்  விவாதத்தை கிளப்பியது. அதாவது அந்த  செய்தியாளர் சந்திப்பில், கூவத்தூரில்  தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்..க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசினார்.


இந்நிலையில் இவரது பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தங்களது கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட A.V.ராஜி என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அவதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்என்று கூறியது.


அதேபோல் நடிகை திரிஷா இது பற்றி கூறுகையில்,”கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இது போன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்என்று கூறியிருந்தார்.


திடீர் பல்டி அடித்த ஏ.வி.ராஜூ:


இந்நிலையில் ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதாக ஏ.வி.ராஜூவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதில்,” நான் கூறியது மாற்றி கூறப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் சொன்னது திரிஷா மாதிரி என்று தான். திரிஷாவை சொல்லவில்லை. அதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். திரிஷா மாதிரி அழகான ஒரு சின்னப்பெண் வேண்டும் என்று தான் வெங்கடாஜலம் கேட்டார். நான் த்ரிஷா என்ற நடிகையைச் சொல்லவில்லைஎன்று கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: திரிஷா குறித்து அவதூறு பேச்சு- வன்மையாக கண்டித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்!


 


மேலும் படிக்க: Munnar Ramesh: என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க.. காரித் துப்பிய சவுதி அரேபியா - மனம் திறந்த மூணார் ரமேஷ்