ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தலைவி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தலைவி படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த்சுவாமி மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

It’s official #Thalaivi release postponed indefinitely due to #COVID19 situation in the country! pic.twitter.com/tcQEj4Ag9v
— Sreedhar Pillai (@sri50) April 9, 2021

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமாக இது உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை" என்ற பாடலின் சிறு தொகுப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 1968-ஆம் ஆண்டு புதிய பூமி என்ற எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தில் வெளியான அந்த பாடல், ஆண்டுகள் கடந்து இன்றளவும் பிரபலமாக இருந்து வருவதுடன், அதிமுகவின் தேர்தல் பிரச்சார பாடலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைவி படத்தில் அரவிந்த்சுவாமி நடித்து வெளியாகியுள்ள அந்த பாடல், புதிய பூமி படத்தில் வெளியான பாடலை போலவே சிறு வித்தியாசம்கூட இல்லாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தலைவி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு தலைவி படம் வெளியாவது சற்று ஒத்திவைக்கப்படுகிறது என்றும், நிச்சயம் படம் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.