இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிகுமார் கனிகா குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னட நடிகர்களை மிரட்டிய துணை முதல்வர்
கன்னட திரை நட்சத்திரங்களை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக யாத்திரையில் கன்னட திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவில்லை. உங்களது பிரச்சனைகளுக்கு என்னிடம் தானே வரவேண்டும் அப்போது உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு வந்தாலும் மாநில உரிமைக்காக டிகே சிவகுமார் பேசியதை காங்கிரஸ் ஆதரித்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா மீது குற்றச்சாட்டு
பெங்களூரில் தற்போது 16 ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய காங்கிரம் எம்.எல்.ஏ ரவிகுமார் கனிகா புஷ்பா 2 பட நடிகை ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அப்போது தான் ஹைதராபாதில் இருப்பதாகவும் கர்நாடகா எங்கிருக்கிறது என நக்கலாக ராஷ்மிகா மந்தனா கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம். மேலும் கன்னட சினிமாவுக்கு மாநில அரசு மானியத்தை தரக்கூடாது இதுகுறித்து கர்நாடகா துணை முதல்வர் மற்றும் முதல்வரிடம் பேசுவேன் என அவர் தெரிவித்துள்ளார்"
ராஷ்மிகா தரப்பு விளக்கம்
இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வரும் நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது எதுவும் உண்மையில்லை என்பதையும் ராஷ்மிகா மந்தனா அப்படி எதுவும் பேசவில்லை என்பதையும் ஊடகங்கள் இந்த செய்தியை பரப்பாமல் இருக்கவும் ராஷ்மிகா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது