சிகந்தர்
ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் சல்மான் கான் நடித்து வரும் படம் சிகந்தர். இந்தியில் கஜினி , அகிரா ஆகிய படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் முருகதாஸ் . தற்போது சல்மான் கானுடன் அவர் கூட்டணி சேர்ந்துள்ளது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிகந்தர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது
சிகந்தர் பட பாடல் ப்ரோமோ
சிகந்தர் படத்தின் முதல் பாடல் ஜோரா ஜபீன் பாடல் இந்த ரம்ஜான் பண்டிகைய முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதன் ப்ரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா சல்மான் ஆகிய இருவரையும் வைத்து செம கொண்டாட்டமான ஒரு பாடலை முருகதாஸ் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் ராஷ்மிகா மந்தனாவின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரியளவில் ஹிட் ஆகி வருகின்றன. சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ஃபீலிங்ஸ் பாட்டு பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. மேலும் சிலர் இந்த பாடல் ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்கள்.
தற்போது சிகந்தர் பட பாடல் அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
மதராஸி
ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.