தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. டோலிவுட் திரையுலகின் பிரபலமான இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. இப்படம் குறித்த சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தி ன.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி படமாக ஹிட் அடித்தது 'அலவைகுந்தபுரமுலு'. இப்படம் தமிழிலும் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது.
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குநராக இருக்கும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ள திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சுனின், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எஸ். தமன்.
இப்படம் தொடங்கிய நாள் முதல் இயக்குநர் திரிவிக்ரமுக்கும், ஹீரோ மகேஷ் பாபுவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் தமன். இப்படத்திற்கு தமன் இசையமைக்க கூடாது என மகேஷ் பாபு படத்தின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், ஆனால் தமன் மற்றும் திரிவிக்ரம் இடையே இருக்கும் நெருக்கமான நட்பால் பிடிவாதமாக தமன் தான் இசையமைக்க வேண்டும் என மகேஷ் பாபுவை சம்மதிக்க வைக்க திரிவிக்ரம் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 'குண்டூர் காரம்' பாடத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அவர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமன் 'குண்டூர் காரம்' படத்தில் இருந்து நீக்கப்படலாம் என வதந்திகள் பரவி வந்தன.
மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமனுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்ததாகவும், அதற்குள் குண்டூர் காரம் படத்தின் அத்தனை பாடல்களையும் முடிக்க வேண்டும் என கெடு வைத்ததாகவும் இவர்களது நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே மகேஷ் பாபு, திரிவிக்ரமிடம் வேறு ஒரு இசையமைப்பாளரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் ஒருவேளை தமன் இப்படத்தில் இருந்து விலகினால் இந்த வாய்ப்பு ஜி.வி. பிரகாஷுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கிடையே வயிறு எரிந்தால் வாழைப்பழம் சாப்பிடுங்கள் என பொடி வைத்துப் பேசி தமன் ட்விட்டரில் முன்னதாகப் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் தமன் 'குண்டூர் காரம்' படத்தில் இருந்து விலக உள்ளார் என்ற தகவல் ஒரு பக்கம் வெளியாக மறுபக்கம் படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் அவரும் விலகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பூஜாவின் கால்ஷீட் பிரச்சனை தான் காரணம் என்று ஒரு தரப்பினரும், அவரின் ஓவர் ஆக்டிங் தான் காரணம் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கான காரணம் பற்றி புரியாமல் டோலிவுட் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.