நீண்ட இடைவெளிக்குப் பின் வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறது. அந்த படத்திற்கு நாய் சேகர் என பெயரிடப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பயன்படுத்தி, நடிகர் சதீஷை வைத்து ஒரு படம் எடுத்து வந்தது. இந்நிலையில் அந்தபடத்தின் தலைப்பை பெற வடிவேலு மற்றும் லைக்கா, இயக்குனர் சுராஜ் ஆகியோர் கடுமையாக முயற்சித்தனர். அது தொடர்பான பேச்சு வார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில் திடீரென நேற்று மாலை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அர்ச்சனா கல்பால்த்தி ஒரு ட்விட்டர் வெளியிட்டார். அதில், நாய் சேகர் படத்தின் தலைப்பை தங்கள் நிறுவனம் பயன்படுத்துவதை அவர் உறுதி செய்தார். அத்தோடு சதிஷ் மற்றும் நாய் ஒன்று இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றையும் அவர் அதில் பதிவிட்டிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட, அந்த போஸ்டர் நேற்று மாலை வெளியானது. 

Continues below advertisement






 


இதன் மூலம் நாய் சேகர் தலைப்பை வடிவேலு தவறவிட்டது உறுதியானது. படம் உறுதியாக தயாராகும் நிலையில், வேறு தலைப்பை தேட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு நேர்ந்தது. இந்நிலையில் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோரை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ ஆகியோர் சந்தித்த போட்டோ வெளியாகியுள்ளது. அவர்களுடன் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சியும் அந்த சந்திப்பில் பங்கேற்றார். இதன் மூலம் வடிவேலு படத்தில் சந்தோஷ் நாராயணன் நடிப்பது உறுதியாகியுள்ளது.



இதில் குறிப்பிடும் படியான விசயம் என்னவென்றால், ‛எஞ்சாயி என்சாமி’ பாடலில் உச்சம் தொட்ட ‛ரவுடி பேபி’ தீ வடிவேலு படத்தில் பாட உள்ளார். அந்த சந்திப்பின் நோக்கமும் அது தான் என கூறப்படுகிறது. 


 



என்ஜாயி என்ஜாமி பாடலைப் போன்றே இந்த படத்திலும் ஒரு பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் வடிவேலு அவரது பாணியில் ஆடிபாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது தொடர்பான உறுதியாக தகவல் பின்னரே தெரியவரும்.