தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்த சிவா நாராயணமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் காலமானார். இந்த செய்தி திரை துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் விசு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூந்தோட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவருக்கு வயது 67. விவேக் மற்றும் வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இந்த நகைச்சுவை நடிகர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் டிசம்பர் 7ம் தேதி இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரின் இறுதி சடங்குகள் வியாழன் மதியம் 2 மணியளவில் பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் நடிகர் சிவ நாராயணமூர்த்தியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.