Comedy Actor Muthukkalai: தமிழின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை B.Lit இலக்கியம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 

 

தமிழ் திரைப்படத்தின் காமெடி நடிகராக இருக்கும் முத்துக்காளை மூன்று பட்டங்களை பெற்றுள்ளார். இவர் அண்மையில் வெளிவந்த B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக  B.Lit தமிழில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

 

சினிமாவில் நடிகராக இருந்தாலும் தான் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்று கனவு கண்ட முத்துக்காளை தற்போது 3 பட்டங்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். இதன் மூலம் பட்டதாரி ஆக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறியுள்ளதாகவும் முத்துக்காளை பேசியுள்ளார். 

 

மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்காளை தனது 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். பின்னர் சினிமாவில் சண்டை பயிற்சியாளர் பணிக்கு சேர்ந்த, சினிமாவில் அறிமுகமாக தொடங்கினார். பின்னர், வடிவேலுவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக காமெடியனாக திரைப்படத்தில் முத்துக்காளை அறிமுகமானார். 

 

அதில் செத்து செத்து விளையாடலாம்....அவன் கிட்ட வாங்கன காசுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து...உன்கிட்ட வாங்கன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து என மொத்தமாக 2 குத்து குத்தி ஓட்டுப் போட்ட காமெடி இன்றும் மீம்ஸ் போடும் அளவுக்கு பிரபலமானது. வடிவேலு கூட இணைந்து துணை நடிகராக முத்துக்காளை நடித்து வந்தாலும், அவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை முத்துக்காளையின் மதுபழக்கத்தை வடிவேலு கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.  சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தாலும், தற்போது மூன்று பட்டங்களை பெற்றிருக்கும் முத்துக்காளை பேசப்பட்டு வருகிறார். 

 

நடிகர் முத்துக்காளை எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் உள்ளிட்ட படங்களில் நண்டித்துள்ளார்.