தாடி பாலாஜியின் மனைவி:
நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து நித்யா தனியாக சென்று குழந்தையுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் உள்ள இரண்டாவது எக்ஸ்டன்ஷனில் வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு எதிரே தங்கியுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் கல் எறிந்துள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் தாடி பாலாஜி மனைவி நித்யாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருந்துள்ளது.
இந்த சண்டையின் உச்சகட்டமான நிகழ்வாக, ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் கல் எறிந்துள்ளார். இது ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பட்டு கார் கண்ணாடி உடைந்துள்ளது.
தாடி பாலாஜியின் மனைவி கல் எறிந்தது சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து, மாதவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்த மாதவரம் போலீசார், அவரை எச்சரித்து அதன் பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். ஆள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தனது எதிர்வீட்டில் கல் எறிந்த சம்பவம் மாதவரம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நித்யா புகார்
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் கொளத்தூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா நேற்று பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அதை தொடர்ந்து நித்யா நிருபர்களிடம் கூறியதாவது,
"கடந்த ஒரு வாரமாக எதிர் வீட்டில் வசிக்கும் மணி என்பவருடன் கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதனால் தன்னையும் தனது குழந்தையும் இழிவான வார்த்தைகளால் மணி குடும்பத்தினர் பேசி வருகின்றனர். மணியின் காரை நான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை” என்றார்.
மேலும், ”நான் சம்பவத்தன்று துணிவு படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு செல்லும்போது, அங்கு சாவி கீழே விழுந்துவிட்டது. அதை தேடி நான் சென்றேன். மற்றப்படி எனக்கும் கார் சேதப்படுத்தியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. புனையப்பட்ட சிசிடிவி காட்டிசியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னிடம் பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்” என்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறினார்
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, ”பணம் தர மறுத்ததால், தனது பெயரை களங்கப்படுத்த அவர்கள் காவல் நிலையத்தில் என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர் என்று நித்யா தெரிவித்தார்.
மேலும் படிக்க