திருச்செந்தூர் சுப்பரமணிய கோவிலில் சாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிகர் விவேக் போல் நகைச்சுவையில் கருத்து சொல்ல தெரியாது. நகைச்சுவையே கைகொடுத்த தொழில் என்றும், அதனை விட்டு தன்னால் வெளியே வரமுடியாது என்றும் நடிகர் யோகி பாபு என்று பேசி இருக்கிறார்.
போட் பட குழுவினர்களாகிய சின்னி ஜெயந்த், ஷா ரா, சாம்ஸ் ஆகியோருடன் திருச்செந்தூர் சுப்பரமணிய கோவிலிலுக்கு வந்த யோகி பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், “விவேக் சார் கருத்துள்ளவர். ஏனென்றால், அப்துல் கலாம் சார் போன்றவர்களுடன் பழகியவர், அதனால் நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். எனக்கு அப்படிப்பட்ட கருத்துக்கள் தெரியாது. டைரக்டர்கள் சொல்வதைதான் நான் செய்து வருகிறேன். மண்டேலா போன்ற படத்தை பெரிய ஹீரோ வைத்து எடுக்க முடியாது. அந்த படமானது, என் முகத்திற்கு ஏற்றமாதிரி அமைந்தது. அது இயக்குநர் அஸ்வின் எனக்கு செய்து கொடுத்தது.
அடுத்தாக, “பொம்மை நாயகி” என்ற படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். அதுவும் என் முகத்திற்கு ஏற்ற படம்தான். இப்போது, இயக்குநர் சிம்பு தாசனின் “போட்” படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் போட்டை பற்றிய படம், இது நகைச்சுவையாக இருக்கும். கதையை வைத்துதான் நான் படம் நடித்து வருகிறேன். ஹீரோவாக நான் எதிலும் நடிக்கவில்லை. காமெடிதான் எனக்கு கைக்கொடுத்தது அதை தாண்டி என்னால் போக முடியாது.” என யோகி பாபு பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் நான்காம் தேதி வெளியான, “லவ் டுடே” படத்தில் பல் டாக்டர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். வழக்கமாக காமெடி செய்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைப்பவர், இந்த படத்தின் கதையில் பிண்ணி பிணைந்து அசத்தியுள்ளார். இதில், கதாநாயகனின் அக்காவாக நடித்த ரவீனா ரவிக்கு ஜோடியாக இவர் நடித்து இருந்தார். அதுமட்டுமன்றி, க்ளைமாக்ஸ் சீன் ஒன்றில், எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கண்கலங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Alia-Ranbir Welcome Baby: பெண் குழந்தைக்கு பெற்றோரான ரன்பீர் -அலியா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்!