HBD Actor Soori | காரைக்குடியில் களைகட்டிய சூரி பிறந்தநாள் விழா: சூட்டிங் ஸ்பாட்டில் திரண்ட ரசிகர்கள்!

காரைக்குடியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பின் போது பரோட்டா சூரி தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

Continues below advertisement
’ எங்க ஊருல இருக்கிற எல்லாரும், ‘உங்க அப்பா முத்துசாமி அளவுக்கு யாராலும் காமெடி பண்ண முடியாது; அவர் பேச ஆரம்பிச்சா, ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து கேட்கலாம்’னு சொல்லுவாங்க. என்னோட பாடி லாங்குவேஜ், ஸ்லாங் எல்லாமே என் அப்பாகிட்ட இருந்து வந்ததுதான். ’ச’க்கு பதிலா ’ஜ’ போட்டு, ஜந்தோஷம், ஜாம்பார்னு நான் சொல்றதெல்லாம் அவர் சொன்னதுதான். அவரோட திறமைகளில் நான் பார்த்து கத்துக்கிட்டது கொஞ்சம்தான். இன்னும் எவ்வளவோ திறமைகள் எங்க அப்பாக்குள்ள இருந்துச்சுனு எங்க ஊர்க்காரங்க சொல்லியிருக்காங்க.’’ என பரோட்டா சூரி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார்.

இப்படி அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைங்க கிராமத்துக் காரங்க, ரசிகர்கள் என ஒரு பட்டாளத்து மேல அன்பு செலுத்தும் சூரி மீது அத விட பன்மடங்கு அன்பு செலுத்த அவரது ரசிகர்கள் இருக்காங்க. சினிமா உலகில் நகைச்சுவை நடிகரா இருந்தாலும், ரியல் லைப்ல சூரி ஒரு ரியல் ஹீரோ தான். பல்வேறு இடங்களிலும் உதவி செய்துவருகிறார். சமீபத்துல  கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். வாழ்க்கையில் பன்முக தன்மை கொண்டவரா வலம் வரும் சூரிக்கு ஆகஸ்ட் 27-லான இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படப்பிடிப்பின் போது அவரது ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் பரோட்டோ நகைச்சுவை காட்சியின் மூலமாக பிரபலமான மதுரையை சேர்ந்த திரைப்பட நடிகர் சூரி. தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவருகிறார்.  இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துவரும் சூரி தனது பிறந்தநாளை காரைக்குடியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பின் போது தனது ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். நடிகர் சூரி படப்பிடிப்பு தளத்தில் தனது ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஹாப்பி பெர்த்துடே சூரி சார்.

மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
மதுரை மண்ணின் மைந்தன் பரோட்டா சூரிக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வர்ராங்க. இந்நிலையில் சூட்டிங் ஸ்பார்டில் ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்ததாக பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola