தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்ச்லி, தனது இவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, இவர் சமீபத்தில் நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் தாங்கள் பெற்றோர் ஆக போவதாக அறிவித்தனர். 


ரெடின் கிங்ஸ்லி:


நடிகர் ரெடின் கிங்ஸ்லி  சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னதாகவே, அஜித் குமார் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' படத்தில் குரூப் டான்ஸராக ஸ்கிரீன் அப்பியேரன்ஸ் கொடுத்தார். இதுவே இவரது முதல் அறிமுக படமாகவும் அமைந்தது.


சென்னை மற்றும் பெங்களூருவில் அரசு கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்த இவர் அதன் மூலம் ஒரு முன்னணி தொழிலதிபராகவும் மாறினார் . நெல்சன் கல்லூரி காலங்களில் அவருடைய டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடனம் அமைத்து கொடுத்த ரெடின் கிங்ஸ்லியை நினைவில் வைத்து கொண்டு,  2016 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து, இயக்கிய' வேட்டை மன்னன்' படத்தில் இவரை நடிக்க வைத்தார். ஆனால் துரிதஷ்டவசமாக அந்த படம் வெளியாகாமல் போனது.


அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி. அதன் பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்,ப்ளடி பெக்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.


இதையும் படிங்க: தியேட்டரில் சொதப்பிய கேம் சேஞ்சர் விரைவில் ஓடிடியில்..ரிலீஸ் தேதி இதோ


டபுள் மீனிங் காமெடி: 


இந்த் நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என்னுடைய படங்களில் டபுள் மீனிங் காமெடிகளை மட்டும் நான் செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் கூறியதாவது, 


எல்லாரும் என்னுடைய படங்களை பார்க்க வேண்டும், அந்த மாதிரியான படங்களில் தான் நான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முன்பு எல்லாம் எல்லா படங்களையும் எல்லோரும் பார்க்க மாட்டார்கள், ஆனால் இப்போது எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கிறார்கள். 
அந்த மாதிரியான நல்ல  படங்களை நடிக்க வேண்டும். 


இதையும் படிங்க: Bottle Radha Review : கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்...பாராட்டுக்களை அள்ளும் பாட்டில் ராதா படம்


பெண்களுக்கு என்னுடைய காமெடி பிடித்துள்ளது, அவர்கள் முகம் சுளிக்கும் படியாக என்றைக்குமே பண்ணக்கூடாது. முக்கியமாக டபுள் மீனிங் காமெடிகளை பண்ணவே கூடாது. என் வீட்டில் கூட பெண்கள் இருக்காங்க, அவங்களும் என்னடா இவன் இப்படி காமெடி பண்றானேன்னு சொல்ற கூடாது.


நாகேஷ் சார் எல்லாம் எடுத்துக்கோங்க அவர் எல்லாம் எவ்வளவு பெரிய ஜினியஸ் இது வரைக்கும் அந்த மாதிரியான வசனத்தை அவர் பேசுனதே கிடையாது. அந்த மாதிரியான பெயரை தான் நான் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கவுண்டமணி அண்ணனும் இந்த விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட், சினிமா என்றால் ஒரு எண்டர்டெய்ண்மெண்ட் அதுல் முகம் சுளிக்கிற மாதிரியான விஷயங்களை நாம பண்ணவே கூடாது என்றார் ரெடின் கிங்ஸ்லி.