கேம் சேஞ்சர்


இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் க்ளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ இப்படத்தை தயாரித்தார். கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில் கேம் சேஞ்சர் படம் ஷங்கருக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்


திரையரங்கில் சொதப்பிய கேம் சேஞ்சர்


சுமார் ரூ 450 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. பல சவால்களை கடந்து தமிழகத்தில் வெளியான இப்படம் நெகட்டிவான விமர்சனங்களையே பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக வெளியான இந்தியன் 2 படமாகட்டும் தற்போது கேம் சேஞ்சர் படமாகட்டும் இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் ஒரே மாதிரியான விமர்சனங்களையே சுட்டிக்காட்டியுள்ளார். படு சுமாரான திரைக்கதையை வைத்துக் கொண்டு லாஜிக் இல்லாமல் பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து படத்தை ஓட வைக்க முடியாது என்பதை இரண்டு படங்களின் மூலம் ரசிகர்கள் உணர்த்தியிருக்கிறாரகள்


முதல் நாளில் உலகளவில் 126 கோடி வசூலித்த கேம் சேஞ்சர் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரியத் தொடங்கியது. தற்போது வரை இப்படம் உலகளவில் 180.45 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


கேம் சேஞ்சர் ஓடிடி ரிலீஸ்


கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கில் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடிடிக்கு வந்த பிறகு மக்களின் கவனத்தை பெறுமா என்பது சந்தேகம் தான். 


படிச்சிருக்கீங்களா இல்லையா..நாகரிகம் தெரியாதா...மிஸ்கின் பேச்சை கண்டித்து வாட்டர்மெலன் ஸ்டார் வீடியோ


தளபதி 69 படத்தின் டைட்டில் இதுவா ? செம பொருத்தமா இருக்கே