தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் நடிகர் மயில்சாமி. பாரதிராஜா திரைப்படம் எடுக்க துவங்கிய காலக்கட்டத்திலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக அறியப்படுகிறார் மயில்சாமி. ஆரம்ப காலக்கட்டத்தில் கவுண்டமணி செந்தில் காம்போ நகைச்சுவை கதாபாத்திரத்தில் சிறு வேடங்களில் வந்து போன மயில்சாமி. அதன் பிறகு படிப்படியாக காமெடியன் , குணச்சித்திர நடிகர் என உயர்ந்தார். பல முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விவேக்குடன் இவர் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.  


சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெற்றவர் மயில்சாமி.மயில்சாமியை பொறுத்தவரைையில் எந்த அளவிற்கு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவிற்கு மது பிரியராகவும்  அறியப்படுகிறார். சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மயில்சாமி, தூக்கம் வரவில்லை என கட்டிங் அடித்துவிட்டு தூங்கியதாக பேசியிருக்கிறார்.




மாதத்திற்கு 30 நாள் , நான் 30 நாளும் வேலைக்கு செல்ல ஆசைப்பட மாட்டேன்..ஐந்து நாள் வேலைக்கு போனால் குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்.10 நாள் வேலைக்கு போனா குடும்பத்தையும் என்னையும் சேர்த்து மற்றவர்களையும் பார்த்துக்கொள்வேன்.. 15 நாள் வேலைக்கு போனால் இறந்தேவிடுவேன் “ என புது விளக்கம் கொடுக்கும் மயில்சாமிதான் கொரோனா காலக்கட்டத்தில் 16 லட்சம் கடன் வாங்கியிருக்கிறாராம். அதனை நினைத்து சில நாட்கள் தூங்க முடியாமல் தவித்தவர், சரவணபவனின் பொங்கலும் கட்டிங்கும் சாப்பிட்டுதான் தூங்கினேன் என பெருமையாக மேடை ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.




இப்படித்தான் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய மயில்சாமி,  “நல்லவன் குடிச்சா குழந்தையாகிவிடுவான்..கெட்டவன் குடித்தால் கொலைக்காரனாகிவிடுவான் “ என பேசியிருந்தார்.  மேலும் “ என்னை தாய்ப்பால் கொடுத்து தாய் எப்படி தூங்க வைத்தாளோ..அதே போல மதுதான் என்னை இன்றளவும் தூங்க வைக்கிறது “ என கவிதை நடையில் வேறு கூறினார். மேலும் குடியே என்னை நினைத்து பெருமைப்படும் ... எப்போதுமே மேடையில் ஏறினாலே நான் இரண்டு பெக் குடித்துவிட்டுதான் பேசுவேன் . ஆனால் குடிக்காமல் பேசிய மேடை இதுதான் என அதனையும் வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார். அது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.


மயில்சாமி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டார். விருகம்பாக்கம் தொகுதியில் நின்று போட்டியிட்ட மயில்சாமி வெறும் 1,435 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். ஆனால் அதுவே தனக்கு கிடைத்த அங்கீகாரம்தான் , இத்தனை பேர் மாற்றத்தை விரும்புவது ஆரோக்யமான செயல்தானே என நேர்மறையாக பேசி அரசியலில் இதல்லாம் சாதாரணமப்பா என ஜாலியாக கடந்துபோனார்.