அருள்நிதி நடிப்பில் வெளியாக உள்ள டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.டி ஊழியர்களுக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. அதனை காண பேய் வேடத்தில் வந்த ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினர்.


திரைப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது.  இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. ஹாரர் படமாக வெளியான இதன் முதல்பாகம் சிறிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. இதேபோல ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி-2  மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில் டிமான்டி காலனி 2  தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியேகமாக அந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது. டிமான்டி காலனி-2 திரைப்படம் வெளியாவதையொட்டி, திரைப்படத்தை பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் பேய் வேடம் அணிந்தும், அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர். இதையடுத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திருடன் சேர்ந்து 450 ஐ.டி ஊழியர்கள் திரைப்படத்தை பார்த்தனர். இது குறித்து பேய் வேஷம் போட்ட ஊழியர்  கூறும்போது, ஒரு சிலருக்கு பேய் படம் மிகவும் பிடித்து வருவதாகவும், குழந்தைகளுக்கும் பேய் என்றால் பயமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த படம் பொதுமக்களை வெகுவாக கவரும் எனவும், இந்த படம் தயாரிப்பாளர் ஐ.டி நிறுவனம் என்பதால் நாங்கள் அனைவரும் இந்த படத்தை காண பேய் வேஷம் போட்டு வந்து உள்ளோம் எனவும் கூறினர். குறிப்பாக இந்த படம் ஆங்கில படத்திற்கு இணையாக ஆடியோ விஷுவல் மற்றும் வீடியோ அனைத்தும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க : Demonte Colony 2 Movie Review : திக் திக் நிமிடங்களில் சிக்கவைத்த டிமான்டி காலனி 2.. அப்படி என்ன இருக்கு?