இந்தியத் திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்கள்.


 




அதனைத்தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பொதுப்பணித்துறை, எரிசக்தி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 250 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வழங்கி கௌரவித்தார்.


 


 


 




மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், தோட்டக்கலைத் துறையின் சார்பாக மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பாக 2 பயனளிகளுக்கு தொழில் முனைவோர் மானிய கடன்களையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் காப்பீட்டு திட்ட பயன்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக 2 பயனாளிகளுக்கு கல்வி கடன்களையும்,


 


 


 




 


மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும், தாட்கோ சார்பாக ஒரு பயனாளிக்கு தொழில் முனைவோர் திட்ட மானிய கடனையும், கூட்டுறவு துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு சுய உதவி குழு கடன்களையும் மற்றும் வருவாய்த் துறையின் சார்பாக முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி 3 பயனாளிகளுக்கும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.1,52,46,588 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.


 


 




 


2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் அரசு இசைப்பள்ளியின் வரவேற்பு நடனம், நகர்மன்ற குமரன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று பாடல் நடனம், வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கோலாட்டம், கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் நாட்டுப்புற நடனம்,


 


 




வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் மேற்கத்திய நடனம், ஆண்டாள் கோயில் கிழக்கு புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று பாடல் நடனம் நடைபெற்றது. இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.