விக்ரமுக்கே டஃப் கொடுப்பாங்க போலேயே - ‘தங்கலான்’ கெட்டப்பில் மிரட்டிய திருச்சி பாய்ஸ்

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்பட கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து படம் பார்க்க வந்த ரசிகர்கள் - திரையரங்க நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Continues below advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தங்கலான் வெளியாகியுள்ளது. காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வரும் சூழலில், தங்கலான் படம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Thangalaan Movie Review : அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதா தங்கம்? விக்ரமின் தங்கலான் பட விமர்சனம் இதோ

தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பல ரசிகர்கள் விக்ரம் நடிகர் கமலையே மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளனர் என்று பாராட்டியுள்ளனர்.

தங்கலான் படத்தின் முதல் பாதி ப்யூர் கூஸ்பம்ப்ஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு முதுகு தண்டாக இருப்பது சியான் விக்ரமின் நடிப்பு தான். விஷுவல் ட்ரீட்டாக படம் உள்ளது. நிச்சயம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை இந்த படம் அடையும் என ரசிகர்கள் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.


தங்கலான் கெட்டப்பில் வந்த ரசிகர்கள்

இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள LA சினிமாஸில் இந்த திரைப்படம் இன்று வெளியானது. திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் சிலர் தங்கலான் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்கிற்கு வந்திருந்தனர். அவர்களிடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் LA சினிமா நிர்வாகம் சார்பாக மேலாடை இன்றி உள்ளே வரக்கூடாது என அவர்களை  தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அவர்கள் மேலாடை அணிந்த பின்பு திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். இதனால்  சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola