Cobra Release: எப்போ எப்போ என்று காத்திருக்கும் ரசிகர்கள்... "கோப்ரா" வெளியீடு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்  


மிகவும் பிரமாண்டமாக உலகமெங்கும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ளது சீயான் விக்ரம் நடிக்கும் "கோப்ரா" திரைப்படம் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பிற்காக மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருகின்றனர்.  கோப்ரா படம் திரையரங்குகளில் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது.  



ஆர்வத்தை தூண்டும் "கோப்ரா" :


7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் சீயான் விக்ரம். இந்நேரம் படம் வெளியாகி இருக்கும் ஆனால் தவிர்க்க  இயலாத சில காரணங்களால் படத்தின் வெளியீடு சற்று தாமதமாகி ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தனர் படக்குழுவினர். இப்படத்தில் கே.ஜி.ஃஎப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி செட்டி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 


ட்ரைலர் குறித்த அப்டேட் :


சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் சீயான் விக்ரம், "கோப்ரா" படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த கேள்விக்கு படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்பதை அறிவித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.   


 






இசைப்புயல் இசையில் :


ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள "கோப்ரா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. 20ற்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்துள்ளார் சீயான் விக்ரம் என கூறப்படுகிறது.  இது ஒரு சூப்பர் திரில்லர் படம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் படத்தின் வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே இருக்கிறது. 


 







மேலும் கோப்ரா படம் வெளியான பிறகு மீண்டும் ஒரு படத்தின் மூலம் சீயான் விக்ரம் - அஜய் ஞானமுத்து ஜோடி இணையவுள்ளது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.