இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் முன்னணி வேடத்தில் நடிக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் திரைப்படமான `கோப்ரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

Continues below advertisement


`கோப்ரா’ படத்தைத் தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் `ஆகஸ்ட் 11 முதல் `கோப்ரா’.. யுகே, ஐரோப்பாவில் அஹிம்சா ஃப்லிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


சுமார் மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தை முழுவதுமாக முடித்துள்ளார் அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து. 



கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே நடிகர் விக்ரம் தனது பணிகளை முழுமையாக முடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தனது பணிகளை முடிக்க வேண்டியதாக இருந்த நடிகர் விக்ரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, தனது பணிகளை முடித்துள்ளார் நடிகர் விக்ரம். 






அதிபுத்திசாலியான கணித் அறிஞராக எண்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் கான் நடிகராக அறிமுகமாகிறார். அவருக்கு `கோப்ரா’ படத்தில் வில்லன் வேடம். 


`கோப்ரா’ படத்தின் ஒளிப்பதிவை ஹரிஷ் கண்ணன், பின்னணி இசையை ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம், நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான `அதீரா’ என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண