Watch Sruthi Nakul: நாக்க மூக்கா நகுலுக்கு பிறந்தநாள்... க்யூட் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ஷ்ருதி

Nakul Birthday:நடிகர் நகுலின் பிறந்த நாளில் அவரது மனைவி ஸ்ருதியின் வாழ்த்து வீடியோ இணையத்தில் மக்களின் மனதை கவர்ந்து வருகிறது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பியான இவர் தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இன்று நகுல் பிறந்தநாள். 

Continues below advertisement

தன் கணவரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ, அவருக்கு ஒரு வீடியோ பதிவு மூலம் வாழ்த்து சொல்லியிருக்கிறார் நகுல் மனைவி சுருபி  என்கிற ஸ்ருதி. இன்ஸ்டாகிராமில் Surbee என்ற பெயராக குறிப்பிட்டுள்ளார்.   

ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகுலின் சிறுவயது புகைப்படங்கள் முதல், வாழ்வின் அழகான தருணங்களின் புகைப்படங்களை வீடியோவாக பகிந்துள்ளார்.

அவர் பிறந்தநாளில் பதிவில், என் வாழ்வில் மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கியமான நபர் என்பதை சொல்வதற்கு உன் பிறந்தநாளில் வாய்ப்பு கிடைத்துள்ளது. உன்னுடன் இருப்பதில், வாழ்வை உன்னுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு அவ்வளவு பிரியம், இதையெல்லாவற்றையும் விட, உன்னைக் காதலிப்பதிலே எனக்கும் எக்கச்சக்க பிரியம். ”You are my today and all of my tomorrow @actornakkhul ! Happiest birthday baby ! We heart you 🤗💜”என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோவில் க்யூட்டான ஒன்று, அகிரா Flying Kiss 2- உடன் அந்த வீடியோ முடிகிறது. அகிரா சிரித்தப்படி, Flying Kiss காட்சி அவ்வளவு அழகாக இருக்கிறது. சுட்டியின் பிறந்தாள் வாழ்த்து நகுலுக்காக...


நடிகர் நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் கடந்த 2020-ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாட்டர் பர்த் முறையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ருதி. அந்த குழந்தைக்கு அகிரா என பெயரிட்டனர். இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வரும் ஜூனில் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.  ஸ்ருதி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் குழந்தைகள் வளர்ப்பு, பெண்கள் ஆரோக்கியம், உடல்நலம் போன்ற ஆரோக்கியம் தொடர்பான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நகுல். மகிழ்ந்திருங்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement