நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 






தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் 9 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.












இதற்கிடையில் படம் பற்றி நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்ததால் கோப்ரா படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர். இந்த சோக சம்பவம் மறைவதற்குள் அடுத்த சோதனையாக கோப்ரா திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. Tamilrockers, Telegram உள்ளிட்ட 4 தளங்களில் இப்படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.