நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 255 சிறப்பு கேடர் அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அடையாளச் சான்று, வயது சான்று, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தங்கள்து புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
பணி விவரம்:
மேலாளர் (வணிக செயல்முறை)-1
Central Operations Team - 2
மேலாளர் (வணிக மேம்பாடு)- 2
திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) - 2
முதலீட்டு அதிகாரி-52
சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர்-147
ரிலேஷன்ஷிப் மேனேஜர் (டீம் லீட்) -37
மண்டலத் தலைவர்- 12
உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் முதுநிலை பட்டப்படிப்பு உடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய பணியில் முன் அனுபவத்துடன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மேலாளர் (வணிக செயல்முறை),- 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Central Operations Team – Support – 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலாளர் (வணிக மேம்பாடு) – 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்)– 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முதலீட்டு அதிகாரி, – 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் – 26 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மண்டலத் தலைவர் – 35 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 750 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களாக இருந்தால் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது..?
- எஸ்.பி.ஐ.-இன் https://www.onlinesbi.sbi/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- பின்னர், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். உங்களுடைய அப்ளிகேசனை பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்ப இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள்.
ஊதியம்:
இந்தப் பதவிகளுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
- Manager (Business Process) –ஆண்டு ஊதியம் ரூ.18 - ரூ.22 லட்சம்
- Central Operations Team – Support – ஆண்டு ஊதியம்ரூ.10 - ரூ.15 லட்சம்
- Manager (Business Development) – ஆண்டு ஊதியம்ரூ.18 - ரூ.22 லட்சம்
- Project Development Manager (Business) – ஆண்டு ஊதியம் ரூ.18 - ரூ.22 லட்சம்
- Investment Officer – ஆண்டு ஊதியம் ரூ.12 - ரூ.18 லட்சம்
- Senior Relationship Manager – ஆண்டு ஊதியம் ரூ.10 - ரூ. 22 லட்சம்
- Relationship Manager (Team Lead) – ஆண்டு ஊதியம்e ரூ.10 - ரூ.28 லட்சம்
- Regional Head – ஆண்டு ஊதியம் ரூ.20 - ரூ.35 லட்சம்
முகவரி மற்றும் தொடர்புக்கு:
State Bank of India
Central Recruitment & Promotion Department
Corporate Centre, Mumbai
Phone: 022-22820427
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2022
முழு அறிவிப்பு குறித்து விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.