Actor Karthi : 'ஜெ' கார்த்திக்கு கொடுத்த அட்வைஸ்...அம்மா சொல்லறதை கேளு... ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி...
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சிவகுமார். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சிறந்த நடிகர். நடிப்பு மட்டுமின்றி சிறந்த மேடை பேச்சாளரும் ஆவர். இவர்களுடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக கலக்கி வருகிறார்கள். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிளாஷ் பேக் ஸ்டோரி :
தமிழ் சினிமாவில் கியூட் தம்பதிகளான சூர்யா - ஜோதிகா திருமணம் காதல் திருமணம் என்பது நாம் அறிந்தது. அதை பற்றி ஒரு சிறிய பிளாஷ் பேக் இங்கே. சிவகுமார் மகளின் திருமணத்திற்காக பத்திரிகை வைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சூர்யாவை பார்த்து அம்மா அடுத்தது உன்னுடைய திருமணம் தானே என்று கேட்டுள்ளார். அப்போது தான் சூர்யா - ஜோதிகா காதல் மலர்ந்த நேரம். ஆரம்பத்திலேயே இப்படியா இனி என்ன நடக்கும் என்ற பீதியில் இருந்தார் சூர்யா. அடுத்த ஒரு வருடத்திலேயே குடும்பத்தாரின் சம்மதத்தோடு சூர்யா -ஜோதிகா திருமணம் நிச்சயமானது. அதற்கு பத்திரிகை வைப்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா வீட்டிற்கு சென்றோம் . அப்போது அம்மா கார்த்திக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். ஜெயலலிதா அம்மா கார்த்திக்கு என்ன அட்வைஸ் கொடுத்தார் என்பதை பற்றி சிவகுமார் நடிகர் சங்கம் மீட்டிங்கில் கூறினார். உலகத்தில் உள்ள எல்லா அம்மக்களுமே அம்மா தான். அதனால் தான் தமிழகமே அவரை அம்மா என்று அழைக்கிறது.
கார்த்திக்கு அட்வைஸ்:
திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக அம்மாவின் வீட்டிற்கு நான், கார்த்தி மற்றும் எனது மகள் சென்றோம். எனது மனைவி வரவில்லை. ஜெயலலிதா அம்மா கூறுகையில் " காதல் கல்யாணம் எல்லாம் சரிதான். ஒரு குடும்பத்தில் ஒரு காதல் கல்யாணம் ஒன்றும் தப்பில்லை ஆனால் "நீ உன் அம்மா பார்த்து வைக்கும் பெண்ணை உங்கள் ஜாதியில் திருமணம் செய்து கொள்" என்று அறிவுரை கூறியுள்ளார். அவருக்கு இதை சொல்ல வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை ஆனால் தமிழகத்தில் உள்ள அனைவரருக்கும் அம்மவாக இருந்ததால் தான் இது போல கூற முடிகிறது. அதே போல என் மகன் கார்த்திக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்றார் சிவகுமார். அவர் அப்போது பேசிய வீடியோ மிகவும் வைரல் ஆனது.
தற்போது சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே அவரவரின் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். கார்த்தி நடிப்பில் "விருமன்" ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக தயாராக உள்ளது. படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர். சூர்யா தயாரிப்பு பணிகளில் மிக மிக பிஸியாக இருக்கிறார். இருவரும் திரைத்துறையிலும் தனிப்பட்ட வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.