Hair Growth : முடி வேகமா வளரணுமா... இந்த ஈஸியான ட்ரிக் ட்ரை பண்ணி பாருங்க...


ஒவ்வொரு பெண்ணுமே தனது சருமம் மற்றும் கூந்தலை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள் ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் பலரிடம்  இருப்பதில்லை. நாம் தினமும்  பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே சிறப்பாக நமது கூந்தலை பராமரிக்க முடியும். பல காரணங்களால் முடி உதிர்தல், பொடுகு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். அதற்கு ஒரு சிறந்த தீர்வினை நாமாக பரிந்துரைக்கிறார் பிரபல சரும நிபுணர் கும்கும் பெஹெரா. 



சிறந்த முறையில் முடி பாதுகாப்பு : 


ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான பல சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது முடி வளர்ச்சியை தூண்டுவதற்கான ஒரு சிறந்த வீட்டு வைத்திய முறையை நமக்காக பகிர்ந்துள்ளார்.


 






 


எப்படி பயன்படுத்த வேண்டும் : 


ஒரு கடாயில் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் 1 ஸ்பூன் லவங்கம் மற்றும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் அளவு பாதி ஆகும் வரை கொதிக்க வைத்தவுடன் அதை ஆறவைத்து லேசாக மசித்து கொள்ளவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி அதை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து 1 முதல் 2 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பிறகு நார்மல் தண்ணீரில் அலசி விட வேண்டும். மைல்டு ஷாம்பு ல்கூட பயன்படுத்த தேவையில்லை. நல்ல ரிசல்ட் கிடைக்க வாரத்திற்கு இரண்டு முறை இதை பின்பற்ற வேண்டும். உங்களின் முடியின் வேர்க்கால்களில் இருந்து இது பலப்படுத்தும். முடிஉதிர்வை தடுத்து முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.  இந்த நீரில் அமினோ ஆசிட், வைட்டமின் மற்றும் மினரல்கள்  நிறைந்திருப்பதால் உங்களின் முடியின் வேர்கால்களை மேம்படுத்தும். இது தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சரும அழற்சி, பொடுகு, மற்றும் அரிப்பினை தடுத்து முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கும். இதை தொறந்து பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும் என்கிறார் சரும நிபுணர் கும்கும் பெஹெரா.