விமர்சங்களை ரஜினிகாந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 


பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.






இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இதில் ஒருவர் விமர்சனங்களை விழுப்புண்களாக ஏற்பவர், ஒருவர் இரவை போர்த்தி இசையால் வருடுபவர்” என்று பதிவிட்டு இருக்கிறார். 






கல்கியின்  பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து நடிகர் இளங்கோ குமரவேலன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் திரைப்பட வடிவத்திற்கு எழுதியுள்ளனர்.  இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.


5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி 2-ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே வைத்தது. 






இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.