லுலு குழுமம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 12 மால்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது, மொத்தம் சுமார் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் விரிவடைகிறது என்று அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.


3 ஆண்டுகளில் 12 மால்கள்


மால்கள், ஹைப்பர் மார்க்கெட்கள், உணவு பதப்படுத்தும் மையங்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்களை மேம்படுத்த 19,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட குழு, நொய்டா, குருகிராம், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் வணிக வளாகங்களை நிறுவும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "அடுத்த மூன்று ஆண்டுகளில் 12 மால்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவை கேரளாவின் கோழிக்கோடு, திரூர், பெரிந்தல்மன்னா, கோட்டயம், பாலக்காடு மற்றும் நொய்டா, வாரணாசி, பிரயாக்ராஜ், அகமதாபாத் (உத்தரபிரதேசத்தில்), ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இருக்கும்” என்று லுலு குரூப் இந்தியாவின் வணிக வளாகங்களின் இயக்குனர் ஷிபு பிலிப்ஸ் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.



5 மில்லியன் சதுர அடி


லுலு குழுமம் தற்போது கொச்சி, திருவனந்தபுரம், திருச்சூர், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் ஐந்து மால்களை ஏற்கனவே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. "மூன்று வருட முடிவில், தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஆறு மால்களில், மொத்த குத்தகைப் பரப்பளவு 3 மில்லியன் சதுர அடியாக உள்ளது. எதிர்காலத்தில், கேரளாவில் 5 மால்களை திறக்கும் போது மேலும் 2 மில்லியன் சதுர அடியை சேர்ப்போம். அகமதாபாத்தில் 2 மில்லியன் சதுர அடி மற்றும் சென்னையில் ஒரு மில்லியன், ஹைதராபாத்தில் அரை மில்லியன் மொத்தம் 4.5 மில்லியன் சதுர அடி மற்றும் பிரக்யராஜ் கூட வந்தால் நாங்கள் மொத்தம் 5 மில்லியனை அடைந்திருப்போம்" என்று பிலிப்ஸ் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: எலிசபெத் ராணி உயிர்பிரிந்த நேரம் வானத்தில் தோன்றிய இரட்டை வானவில்! மக்கள் நெகிழ்ச்சி!


உத்தரப்பிரதேசம்


மேலும் அவர் கூறுகையில், லுலு குழுமத்திற்கு உத்தரபிரதேசம் ஒரு முக்கியமான சந்தையாகும். “நாங்கள் பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசியில் இதற்காக நிலம் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், அதன் பிறகு கான்பூரில் கவனம் செலுத்த இருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே லக்னோவில் ரூ.2,000 கோடி முதலீடு செய்துள்ளோம். ஏற்கனவே 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் மையத்தையும் கொண்டு வருகிறோம். உத்தரபிரதேசத்தில் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் தொடர்பாக மேலும் 2,000 கோடி ரூபாய் செலவு செய்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,” என்று பிலிப்ஸ் மேலும் கூறினார்.



பணிகள் எந்த அளவில் உள்ளன?


நொய்டாவில் உள்ள மால் பற்றி, லுலு குழுமத்தின் இயக்குனர் கூறுகையில், சில்லறை சொத்து இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ளது, மேலும் சந்தை வாய்ப்புகளின் அடிப்படையில் இடம் தீர்மானிக்கப்படும் என்றார். “நாங்கள் தற்போது சந்தையைப் புரிந்துகொண்டு வருகிறோம். முழுக்க முழுக்க வணிக வளாகமாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்குள் தயாராகி விடும், ஹைப்பர் மார்க்கெட்டாக இருந்தால், ஓராண்டுக்குள் நடந்துவிடும்,'' என்றார். குருகிராமில், லுலு குழுமம் ஒரு ஹைப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக ஒரு மாலில் இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இது கட்டுமானத்தில் உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு பகுதி பெங்களூரு என்றும், பெங்களூருவில் மேலும் நான்கு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு மினி மால் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார். இதுதவிர சென்னையில் உள்ள நிலங்களையும் இந்த குழுவினர் தேடி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.