”மணிவண்ணன் செருப்பால் 200 பேரையாவது அடிக்கவேண்டும்”- வைரலாகும் சீமானின் பேச்சு

மணிவண்ணன் கடைசியாக பயன்படுத்திய செருப்பு என்னிடம் உள்ளது. அதை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன். அந்த செருப்பை கொண்டு குறைந்தது 200 பேரையாவது அடிக்க வேண்டும் - சீமான்

Continues below advertisement

மணிவண்ணன் செருப்பால் 200 பேரையாவது அடிக்க வேண்டும் என்பதால் அவரது செருப்பை பாதுகாத்து பத்திரமாக வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

சிறந்த இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பல பரிமாணங்களை திரையில் காட்டியவர்தான் மணிவண்ணன். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் நக்கல் கலந்த நையாண்டியை கொடுத்து அசத்தி இருப்பார். வில்லனாகவும், காமெடி கேரக்டரிலும், வெகுளி தந்தையாகவும் நடித்து அசத்திய மணிவண்ணன், அரசியலை பேசாமல் இருந்தது இல்லை. மணிவண்ணனின் அரசியல் சித்தாந்தத்தை கூறுவது அமைதிப்படை. பாமர மக்களுக்கும் எளிமையாக கதை சொல்வதை மணிவண்ணன் தனி பாணியை கையாண்டு இருப்பார். இதற்கு பாலைவன ரோஜாக்கள், வாழ்க்கை சக்கரம் மற்றும் சோழர் பாண்டியன் படங்களை உதாரணமாக கூறலாம். 


மணிவண்ணனின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த சில தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதனால் இந்த வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. ஒருமுறை மணிவண்ணன் குறித்து சீமான் பேசியபோது, ”மணிவண்ணனிடம் பல புத்தகங்கள் இருந்ததாகவும், தன்னுடைய மறைவுக்கு பிறகு அதை நூலகமாக வைக்க வேண்டும் என தன்னிடம் கூறியதாகவும்” அதில் பேசியுள்ளார். அவரது மறைவுக்கு பிறகு மணிவண்ணனிடம் இருந்த புத்தகங்களை எடுத்து பலர் சென்றுவிட்டதாக கூறிய சீமான், இருக்கும் அவரது புத்தகங்களை வைத்து நூலகம் அமைப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், மணிவண்ணன் கடைசியாக பயன்படுத்திய செருப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும், அந்த செருப்பை கொண்டு குறைந்தது 200 பேரையாவது அடிக்க வேண்டும் என சீமான் பேசியிருக்கிறார்.

 

தொடர்ந்து வேறொரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், ”மணிவண்ணன் நல்லா சமைப்பார்” என்றார். திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது ஷாட்ஸ் எடுத்து கொண்டிருக்கும்போதே, மற்றொருபக்கம் சமைத்து கொண்டிருப்பார் என்ற தகவலையும் சீமான் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை படத்துக்கான காட்சி வசனங்கள் சரியாக வரவில்லை. என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த மணிவண்ணன், “ஒரு டீ கொண்டு வா” என்றார். டீயை குடித்த மணிவண்ணன் அடுத்த சில நிமிடங்களில் முழு காட்சிக்கான வசனத்தையும் எழுதி விட்டார். வசனத்தை எழுதி முடித்ததும், “நீ கேட்ட வசனம் இந்த டீயில் தான் இருக்கிறது” என மணிவண்ணன் கூறியதாக சீமான் தெரிவித்திருந்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola