அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


 




 


கரூர், அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை உள்ளது 90 அடி உயரம் கொண்ட அணையில் 447 மில்லியன் கன அடி நீரை தீர்க்க முடியும். இதன் மூலம் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் 57,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 17,000 நிலத்தில் மஞ்சள், வாழை, நெல், சூரியகாந்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி க.பரமூர்த்தி கரூர் தாந்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்ய  துவங்கியுள்ளது. அணை நீர்மட்டம் விரைவாக உயர துவங்கியுள்ளது. கடந்த 15 நாட்களில் 46.51 அடியில் இருந்து 62.80 அடியாக உயர்ந்துள்ளது. இதை எடுத்து காலை 8 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து ஆற்றில் மீண்டும் வினாடிக்கு 212 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அமராவதி அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 617 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம் 62.80 அடியாக இருந்தது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



மாயனூர் கதவணை


 


 




 


 


கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 11,629 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 11,86 கனடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் 1186 கன அடியும் தென்கரை வாய்க்காலில் 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 9.84 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.