Cinema News Today LIVE : சிம்புவின் பத்து தல பட ஸ்டில்ஸ்!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இங்கு காண்போம்.

தனுஷ்யா Last Updated: 22 Feb 2023 07:09 PM
Vishal : பெரும் விபத்தில் இருந்து தப்பிய விஷால்!

மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது ஏற்பட்டுள்ள பெரிய விபரீதத்தில் இருந்து விஷால் தப்பியுள்ளார். அவ்விபத்தில் இருந்து தப்பியதால், இறைவனுக்கு நன்றி செலுத்தி விஷால் ட்வீட் செய்துள்ளார்.


 





Pathu Thala stills : சிம்பு நடித்துள்ள பத்து தல பட ஸ்டில்ஸ்!

சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.


 

Agilan : அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படம், வருகிற மார்ச் 10 ஆம் தேதி வெளியாகிறது

Vaathi : வாத்தி படத்தின் பிரட்டன் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் என்ன?

தனுஷ் நடித்த வாத்தி படம், பிரட்டன் நாட்டில் 1.5 கோடி ரூபாயை வசுல் செய்துள்ளது.



Agilan : அகிலன் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய ஜீ நிறுவனம்!

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை, ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.

Andhagan : பிரசாந்தின் அந்தகன் படம் குறித்த அப்டேட்!

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்தின் நடிப்பில் வெளியாகும் அந்தகன் படத்திலிருந்து, நாளை மாலை 6 மணிக்கு பாடல்
வெளியாகவுள்ளது.


 




 

Chilla Chilla song : சில்லா சில்லா வீடியோ பாடல் வெளியானது!

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.


 


Aishwaryaa Rajinikanth : திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

திருவண்ணாமலை சாலையில் சைக்கிளிங் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்.




 

Cheran : இயக்குநர் சேரனுடன் மலையாள நடிகர் எடுத்த புகைப்படம்!

தமிழ் இயக்குநர் மற்றும் நடிகருமான சேரனுடன், மலையாள பாடகர் மற்றும் நடிகருமான வினீத் ஸ்ரீநிவாசன் புகைப்படம் எடுத்துள்ளார்.




 

Subi Suresh : மாலிவுட் பிரபலம் சுபி சுரேஷ் 41வது வயதில் காலமானார்

நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் நிமோனியா காய்சலால், 41வது வயதில் காலமானார்.



Pawan Kalyan : படப்பிடிப்பிற்கு திரும்பிய டோலிவுட் நடிகர் பவன் கல்யாண்!

டோலிவுட் நடிகர் பவன் கல்யாண், தனது புதிய படபிடிப்பிற்கு திரும்பியுள்ளார். இப்படத்தில், சாய் தரம் தேஜும் நடிக்கவுள்ளார்.



Dasara : நானியின் புது முகப்பு புகைப்படம்!

தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தசரா படத்தின் லுக்கை வைத்துள்ள நடிகர் நானி. 




 

Alia Bhatt : ஆலியா பட்டின் வீட்டிற்குள் நுழைந்து போட்டோ எடுத்த மர்ம நபர்கள்

அனுமதி இல்லாமல் வீட்டில் இருந்த தன்னை 2 நபர்கள் பக்கத்து வீட்டில் இருந்து புகைப்படம் எடுத்ததாக நடிகை ஆலியா பட் குற்றம் சாட்டியுள்ளார். 



Actor Santhanam : பழனி முருகன் கோவிலில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்து சாமி தரிசனம்

மூன்று கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர் ரோப்கார் மூலமாக மலை மீது சென்ற நடிகர் சந்தானம் முருகனை தரிசனம் செய்தார்.



Varisu : ஓடிடியில் வெளியான வாரிசு!

300 கோடி மேல் வசூல் செய்த வாரிசு படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Roja Kootam : 21 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஜா கூட்டம்!

ஸ்ரீ காந்த் மற்றும் பூமிகாவின் அறிமுக தமிழ் படமான ரோஜா கூட்டம் வெளியாகி இன்றுடன், 21 ஆண்டுகள் ஆனது.

4yearsofLKG : எல்.கே.ஜி படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு!

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த எல்.கே.ஜி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.

Haridas : கிஷோர் நடித்த ஹரிதாஸ் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!

கிஷோர், சினேகா மற்றும் சூரி ஆகியோர் நடித்த ஹரிதாஸ் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Actor Prabhu : நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Background

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபு, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு சங்கிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அவரின் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 2004 ஆம் ஆண்டிற்குப் பின் ஹீரோவை தொடர்ந்து குணச்சித்திர கேரக்டரில் பிரபு நடிக்க தொடங்கினார். அவருக்கு சந்திரமுகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தாமிரபரணி, உனக்கும் எனக்கும், அயன், பில்லா,3, ஆம்பள, தெறி, சாமி-2 என பல படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபு நடித்துள்ளார். 


கடந்தாண்டு மட்டும் பிரபு நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், லத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு படத்திலும் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த 2 தினங்கள் முன்பு கூட நடிகர் மயில்சாமி மறைவுக்கு அவரது வீட்டுக்கு சென்ற பிரபு, உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். 


இந்நிலையில் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபு நேற்று முன்தினம் (பிப்ரவரி 20) ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 21) காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பிரபு தற்போது பூரண உடல் நலத்துடன்  இருக்கிறார் என்றும்,  அறுவை சிகிச்சைக்கு பின்னால் மேற்கொள்ளப்படும் பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு  ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு விரைந்து நலம் பெற ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.