Cinema News Today LIVE : 1000 கோடி வசூலை அள்ளிய பதான் படம்!
நேற்று காலை காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
சில ஆண்டுகளுக்கு பின், ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
அஹிம்சா நிறுவனம் தயாரிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் லேட்டஸ்ட் அப்டேட்டில், நடிகர் ஷா ரா மாறனாகவும், மைம் கோபி டேஞ்சர் மாமாவாகவும், ரெடின் கிங்ஸ்லி டிஜித்தாகவும் நடிக்கவுள்ளார்.
ஷாருக்கான் ரசிகர் ஒருவர், ஷாருக்கானிடம் மொக்கை ஜோக் ஒன்றை கூறுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது, ஷாருக்கான் அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.
வைரலாகி வரும் ஷாருக்கானின் வேடிக்கையான ட்வீட் :
அஹிம்சா நிறுவனம் தயாரிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். தீபா ஷங்கர் செல்வி அம்மாகவும், லக்ஷ்மி ப்ரியா தேன்மொழியாகவும், கருணாகரன் துரையாகவும், சுனில் ரெட்டி கண்ணனாகவும் நடிக்கவுள்ளனர்.
வீட்டில் அனுமதியின்றி கிளிகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்.
உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு அலெக்சாண்டர் கிளிகளை வீட்டில் வளர்த்ததால் வனத்துறை அபராதம் விதித்துள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் பூங்காவில் வனத்துறை ஒப்படைத்துள்ளனர்.
அஹிம்சா நிறுவனம் தயாரிக்கும் சொப்பன சுந்தரி படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் அகல்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஹிப் ஹாப் ஆதியின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள வீரன் பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
வடபழனி மின் மயானத்தில் உள்ள மின் தகன மேடையில் மயில்சாமியின் உடல் எரியூட்டப்பட்டது
வடபழனி மின் மயானத்தில், இறுதி சடங்குகளைத் தொடர்ந்து மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது
வடபழனி மின் மயானத்தில், மயில்சாமியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைப்பெற்று வருகிறது
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மின் மயானத்தை அடைந்தது
மயில்சாமியின் நகைச்சுவை பல காலங்களுக்கு பேசப்படும். கலைவாணரின் கொடை உள்ளத்தை பெற்றவர் மயில்சாமி. ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது. மயில்சாமி எனக்கு ரசிகராக இருந்தார் என்பதை விட, அவருக்கு நான் ரசிகராக இருந்தேன். அவரின் மாற்றுக்குரல் கலை மூலம் அனைவரையும் மகிழ்வித்தார் - வைரமுத்து
சொந்த பந்தங்களை தாண்டி பல பொது மக்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். மனிதர்களின் மனதை வென்றுள்ளார். நாங்கள் நன்றாக பழகி உள்ளோம். அருமையாக சமையல் செய்வார். எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பார். - பிக்பாஸ் டேனி
நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளோம். படங்களிலும் இணைந்து நடித்துள்ளோம். யோசிக்காமல் உதவி செய்வார். அவரின் சம்பளத்தை, மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார். கொரோனா மற்றும் சென்னை வெள்ளத்தில் பல உதவிகள் செய்துள்ளார். பல மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளார். வீட்டில் உள்ள நபர்களுடன் பாசமாக இருப்பார். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன். - நகைச்சுவை நடிகர் கிங் காங்.
நானும் அவரும் ஒஸ்தியில் நடித்துள்ளோம். அவரை மயில் அண்ணன் என்று சொல்ல மாட்டேன் மயில் என்றுதான் சொல்வேன். மயில்சாமி அவர்களின் இறப்பு செய்தியை கேட்டப்போது வருத்தப்பட்டேன்- ஜித்தன் ரமேஷ்
25 ஆண்டு காலமாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம். பாரபட்சம் இல்லாமல் சகஜமாக பழகக்கூடிய நபர். பலருக்கும் பல உதவிகள் செய்துள்ளார். அவர் இருந்தால் படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும். அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக்கொடுப்பார். மனமார பாராட்டும் மனம் கொண்டவர். இது மிகவும் பெரிய இழப்பு. மயில்சாமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - தலைவாசல் விஜய்
நேற்று காலை காலமான, மயில்சாமியின் குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மயில்சாமி ஒரு தீவர சிவபக்தர் என்றும் எம்ஜிஆரின் ரசிகர் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
மாரடைப்பால் காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு, தமிழ் திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.
ஊர்வலமாக எடுத்துச் சென்று உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது
கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி விரும்பினார்.
சிவனுக்கு எனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் - ரஜினி
சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் இல்லத்திலிருந்து கிளம்பிய இறுதி ஊர்வலம், ஏவிஎம் மையானத்திற்கு செல்கிறது.
நேற்று காலை மாரடைப்பால் காலமான மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் சிவ தொண்டர்கள், கைலாய வாத்தியம் வாசித்து வருகின்றனர்.
Background
மறைந்த நடிகர் மயில்சாமியிடம் தான் மன்னிப்பு கேட்க நினைத்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மயில்சாமி. 57 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார்.சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த மயில்சாமியை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவுக்கு பிரபலமானவர். இந்நிலையில் அவரது மறைவு செய்தி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இன்று காலை மயில்சாமி இல்லத்திற்கு சென்ற ரஜினி, அவரது உடலுக்கு அஞ்சலி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”மயில்சாமி தன்னுடைய நீண்ட கால நண்பர் என குறிப்பிட்டார். அவரின் 23, 24 வயசுலேயே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்தவர். இரண்டு பேரின் தீவிர ரசிகர். ஒருவர் எம்ஜிஆர். இன்னொருவர் சிவன். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம். அப்போது சும்மா சினிமா எப்படி இருக்குன்னு கேட்பேன். மயில்சாமி என்னிடம் சினிமா பற்றி பேசவே மாட்டார். சிவன் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான் பேசுவார்.
இதேபோல ஒவ்வொரு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கும் அங்க போயிருவாரு. அங்க இருக்க கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணுவாரு. ஏதோ அவரோட முதல் படத்துக்கு வர்ற கூட்டம் மாதிரி உற்சாகமா இருப்பாரு. கடந்த கார்த்திகை தீபத்துக்கு போன் பண்ணாரு. நான் ஷூட்டிங்கில் இருந்ததால போன் அட்டெண்ட் பண்ணல. அடுத்து மூன்று முறை கூப்பிட்டுருந்தாரு. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதை அப்படியே மறந்து போய்ட்டேன். அவர் இப்ப மறைஞ்சு போய்ட்டாரு” என வருத்ததுடன் பதிவு செய்தார்.
மேலும், “விவேக், மற்றும் மயில்சாமி ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களின் மரணம் சினிமா துறை மற்றும் சமூகத்திற்கு பேரிழப்பாகும். சிவராத்திரி அன்னைக்கு மயில்சாமி இறந்தது, தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் எனலாம். இது தற்செயல் அல்ல. அவனின் கணக்கு” எனவும் ரஜினி தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -