Cinema News Today LIVE: பிரபல நடிகர் மயில்சாமி மறைவு - திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி
திரையுலகம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு சினிமா லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உயிரிழந்துள்ளார். இதனால், மனோஜ் லியோ படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு திரும்பவுள்ளார்.
கதிர், சமுத்திரkகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் தலைக்கூத்தல் கடந்த 3ஆம் தேதி வெளியான திரைப்படம், தலைக்கூத்தல். இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 3ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடனக்கலைஞரும் நடிகருமான பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பாகீரா. இப்படம், மார்ச் 3 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குணச்சித்திர நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு, பிரபல நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அ.இ.அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், வைகைச்செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் மயில்சாமி மறைந்து விட்டார்...! நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா..? அசைவ சாப்பாடா..? என்று கேட்டால் எம்.ஜி.ஆர் சாப்பாடு என்பார்...! நல்ல மனிதர், நயத்தகு பண்பாளர்..! என்று நினைவு கூறுகிறேன்..!
-இவ்வாறாக வைகைச்செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அண்ணனின் 80ஆவது பிறந்தநாளில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக, ரஜினி பெங்களூருவிற்கு சென்றுள்ளார். இந்நிகழ்வின் போது எடுக்கபட்ட ரஜினியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல குணச்சித்திர நடிகர் மயில்சாமி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது நடிகர் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.
பிரபல குணச்சித்திர நடிகர் மயில்சாமி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது நடிகர் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சோனி-லைவ் ஓடிடி தளத்தில் வெளியான இருதுருவம் தொடரின் இரண்டாவது சீசன், பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகிறது. க்ரைம்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்தொடரில் நடிகர்கள் பிரசன்னா, நந்தா, அபிராமி, ஜீவ ரவி, கார்த்திக் நாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இருதுருவம் தொடரின் முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழின் மூத்த நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக, மகாசிவராத்திரியின் மறுநாளான இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரபல நடிகர்கள் மற்றும் திரைத்துறையில் உள்ள கலைஞர்கள் பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கோலிவுட் உலகில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பல உருவம் எடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணனுடன் அடுத்த படத்தில் கைகோர்க்கவுள்ளார். இந்த படத்திற்கு வீரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக்’ நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு கோலிவுட்டின் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாரடைப்பால் உயிரழந்த நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு காலையிலிருந்து பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். நடிகர்கள் கார்த்தி, சித்தார்த், ராதாரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மாரடைப்பால் உயிரழந்த நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு காலையிலிருந்து பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். நடிகர்கள் கார்த்தி, சித்தார்த், ராதாரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கோலிவுட் நடிகர் கார்த்தி நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அனுபமா, 27ஆவது பிறந்தநாளை நேற்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பர்த்டே கொண்டாட்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் அனுபமா பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகர் மயில்சாமி மறைவுக்கு பிரபல நடிகர்கள் பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Background
தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மயில்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரடைப்பு:
விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு, அதிகாலை 03.30 நெஞ்சுவலி ஏற்படவே, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே ஒருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவு, இது இரண்டாவது முறை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மயில்சாமி உடலுக்கு சென்னையிலேயே இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கலை பயணம்:
1965ம் ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான லெஜண்ட் படத்திலும் நடித்து இருந்தார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ”திருப்பதியில் லட்டுக்கு பதிலா அல்வா கொடுக்குறாங்க பாஸ், எதிர்த்து நிக்குறது தோனி மா, அது அநாவசியம்” போன்ற மயில்சாமியின் வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள மீம் டெம்ப்ளேட்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளர்:
2002 முதல் 2004 வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றையும் மயில்சாமி தொகுத்து வழங்கினார், அதற்காக 2003 இல் சிறந்த தொகுப்பாளருக்கான டெலி விருதையும் வென்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -