Cinema News Today LIVE : எப்படி இருக்கு பகாசுரனின் முதல் பாதி..படம் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

Cinema News Today LIVE Updates, 16 February : நாளை தனுஷின் வாத்தியும், பகாசுரனும் வெளியாகவுள்ள நிலையில், அந்த இரு படங்கள் பற்றியும் மற்ற சினிமா தகவல்கள் குறித்த அப்டேட் பற்றியும் இங்கு காணலாம்.

தனுஷ்யா Last Updated: 16 Feb 2023 06:27 PM
Bakasuran : எப்படி இருக்கு பகாசுரனின் முதல் பாதி?

செல்வராகன் நடித்த பகாசுரனின் முதல் பாகம், மிகவும் நீளமாக உள்ளது. செல்வராகவனின் நடிப்பு கொஞ்சம் சுமாராகவே உள்ளது. இருப்பினும், பகாசுரன், போர் அடிக்காத கதையை கொண்டுள்ளது.

மலேசியா விமானம் பற்றிய ஆவணப்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் ஓடிடி தளம் 

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட உள்ளது.

மலேசியா விமானம் பற்றிய ஆவணப்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் ஓடிடி தளம் 

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட உள்ளது.

AdiPurush : ராம நவமி அன்று வெளியாகுமா ஆதிபுருஷின் ட்ரெய்லர்..?

பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் இதிகாச கதை கொண்ட படமான, ஆதிபுருஷின் ட்ரெய்லர், வரும் ராம நவமி (மார்ச் 30) அன்று வெளியிட அப்படத்தின் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

MS Dhoni - Yogi babu : யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட்டினை பரிசாக கொடுத்த தோனி!

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, யோகி பாபுவிற்கு, தனது பயிற்சியில் பயன்படுத்திய பேட்டினை பரிசாக கொடுத்துள்ளார். லெட்ஸ் கெட் மேரிட் படத்தை தோனியின் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அப்படத்தில், நடிக்கும் யோகி பாபுவிற்கு இந்த பரிசை தோனி கொடுத்துள்ளார். இந்த பேட்டில், யோகி பாபுவிற்கு வாழ்த்துக்கள் என்று எழுதி ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார்.



Pathaan : இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலை பெற்ற பதான்..

ஷாருக்கானின் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பதான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், கோடிக்கணக்கான வசூலையும் குவித்தது. தற்போது, இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலை பதான் அள்ளியுள்ளது

Thunivu : ஆறாவது வாரத்திலும் கலக்கும் துணிவு..

அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படம், இலங்கையின் திரையரங்குகளில் ஆறாவது வாரத்திலும் ஓடும் என அறிவிப்பு வந்துள்ளது 

Salman Khan Johnny Master : சல்மான் கானுடன் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்

வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில், வாரிசு படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். நடன பயிற்சியின் போது சல்மான் கானுடன் போட்டோ எடுத்த ஜானி மாஸ்டர், அதை பகிர்ந்துள்ளார்.

Thunivu OTT : ஓடிடியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த துணிவு

கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி பொறுத்தவரை, இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஹிந்தியில் டப் செய்யப்பட்ட துணிவு, பான் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Shahrukh Salman : 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இணைகிறார்களா?

யஷ் ராஜ் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில், முன்னணி பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்.

Vishal : அடுத்தடுத்த படங்களில் பிசியாகப்போகும் நடிகர் விஷால்!

கோலிவுட்டின் ஹீரோக்களுள் ஒருவரான விஷால், அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.





Soppana Sundari : ஐஸ்வர்யா நடிக்கும் சொப்பன சுந்தரி படத்தை தயாரிக்கவுள்ள அஹிம்சா நிறுவனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சொப்பன சுந்தரி படத்தை ஹம்சினி தயாரிப்பு நிறுவனத்துடன் அஹிம்சா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கவுள்ளது. இப்படம், வருகிற மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

Dada : டாடா படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்..

டாடா குறித்த பாசிடீவ் விமர்சனங்கள் பட்டிதொட்டியெங்கும் பரவும் நிலையில், டாடா படத்தின் இயக்குநர் கணேஷின் குருவாகிய, ரமேஷ் செல்வா அப்படத்தை கண்டு கழித்துள்ளார்.

Sangharshana : சங்கர்ஷனா படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி

சின்னா வெங்கடேஷ் இயக்கும் சங்கர்ஷனா படத்தின் மோஷன் போஸ்டரை, இன்று மாலை 4.05 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.

Suriya Sachin : சச்சினுடன் போட்டோ எடுத்து பகிர்ந்த நடிகர் சூர்யா

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுடன் புகைப்படம் எடுத்து, அதை அவரின் சமூக வலைதள பக்கங்களில் சூர்யாவே ஷேர் செய்துள்ளார்.

Maaveeran : நாளை வெளியாகும் மாவீரன் படத்தின் முதல் சிங்கிள்!

நேற்று மாலை, சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலிருந்து முதல் சிங்கிளின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அந்த வீடியோவில், முதல் சிங்கிள் நாளை வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lyca Production : அருள்நிதி படத்தை தயாரிக்கப்போகும் லைகா நிறுவனம்

லைகா நிறுவனம், தான் தயாரிக்கும் 24 வது படம் குறித்த தகவலை இன்று காலை அறிவிப்பதாக தெரிவித்தது. தற்போது, அவர்கள் தயாரிக்கும் படத்தில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். திருவின் குரல் என பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்,அருள் நிதி மற்றும் பாரதி ராஜா ஆகியோர் உள்ளனர்.





Dada Movie : டாடா படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன் - ராகாவா லாரன்ஸ்

நான் டாடா படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன்.  இப்படம், திரையரங்கிற்கு சென்று பார்க்கக் கூடிய சரியான குடும்பப் படம். தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் நன்றாக எழுதி இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் சிறப்பாக நடித்துள்ளனர் -  ராகாவா லாரன்ஸ்.


 


 
Dada Movie : டாடா படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன் - ராகாவா லாரன்ஸ்

நான் டாடா படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன்.  இப்படம், திரையரங்கிற்கு சென்று பார்க்கக் கூடிய சரியான குடும்பப் படம். தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் நன்றாக எழுதி இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் சிறப்பாக நடித்துள்ளனர் -  ராகாவா லாரன்ஸ்,


 


 
Indian 2 : சென்னையில் நடக்கவிருக்கும் இந்தியன் 2-வின் படப்பிடிப்பு

இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை ஆதித்யாராம் ஸ்டுடியோவில் தொடங்குகிறது. இது அடுத்த 30 நாட்களுக்கு தொடரும்.

Bakasuran : விறுவிறு முன்பதிவு .. தனுஷின் வாத்தி படத்துக்கு டஃப் கொடுக்கும் பகாசுரன்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Background

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர்.


சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (பிப்ரவரி 17) வெளியாகிறது. இதேநாளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகிறது. ஒரே நாளில் அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் மோதுவது பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தனுஷ் படத்துக்கு போட்டியாக பகாசூரன் வெளியாகிறது என்ற தகவலையும் மோகன் ஜி மறுத்தார்.  முன்னதாக நேர்காணல் ஒன்றில் பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பல ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்டு தற்போது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது என மோகன் ஜி கூறியிருந்தார்.


தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில்  வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்?, ஆன்லைன் பாலியல் மோசடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பகாசூரன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் தான் பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் நடித்திருப்பது பெரிய பலம் என்பதால் பலரும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.