Cinema News Today LIVE : நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல்
Cinema News Today LIVE Updates, 15 February: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி இங்கு காணலாம்.
Robo Shankar Alexandrian Parakeets : நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல்
லைகா புரொடக்ஷனின் அடுத்த படத்தின் தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாவீரன் படத்தின் முதல் சிங்கிளின் க்ளிம்ப்ஸ் காட்சி இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகவுள்ளது.
அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது ஓ மை டார்லிங் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும், அனிகாவை பலரும் ட்ரால் செய்தனர். அதற்கு அனிகா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஓ மை டார்லிங் முழு நீள காதல் திரைப்படமாகும். இதில் முத்தக்காட்சி என்பது தவிர்க்க முடியாதது. இயக்குநர் கதை சொல்லும் போது காட்சியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருந்தார். இதில் துளி கூட ஆபாசம் இருக்காது என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் - அனிகா
தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சாராகவும் களமிறங்கவுள்ள தனுஷின் படத்தை ஸ்பெஷல் காட்சியில் பார்த்தவர்கள், பாசிடீவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
ஜய ஜய ஜய ஜய ஹே பட இயக்கிய பேசில் ஜோசப்பிற்கும் அவரது மனைவி எலிசபத் ஜோசப்பிற்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு, ஹோப் எலிசபத் ஜோசப் என பெயரிட்டுள்ளனர்.
பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது, சமந்தா நடிப்பில் உருவான இப்படம், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆர் ஆர் ஆர் படத்தையடுத்து தெலுங்கு நடிகர் ராம் சரணின் மார்க்கெட் எகிறிவிட்டது. தற்போது ஷங்கரின் ஆர்.சி 15 படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு, நார்தன், சுகுமார், பிரசாந்த் நீல், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் இணைந்து படம் நடிக்கவுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் வெளியான ஜோக்கர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் கதாநாயகன் ஆக்கின் பீனிக்ஸுடன், ஹார்லி குயின் கதாபாத்திரத்தில் லேடி காகா நடிக்கவுள்ளார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அதிகமுறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் அஜித் நடித்து துணிவு (இந்தி) முதலிடமும், துணிவு (தமிழ்) 2வது இடமும், துணிவு (தெலுங்கு) 4வது இடமும் பெற்றுள்ளது.
ஓடிடியில் வெளியான துவக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் அதிக நேரம் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. உலகளவில் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்ற துணிவை விட அதிகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்ட படம் என்ற பெருமையை பீஸ்ட் பெற்றுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த சினிமா ஆய்வு நிறுவனமான, ஆர்மாக்ஸ் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா
கன்னட மக்கள் வழிபடும் பஞ்சுருளி தெய்வத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா படம், நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படம், ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
நவம்பர் 4 அன்று வெளியாகி பல இளசுகளை ஈர்த்த லவ் டுடே, பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய வசூலை குவித்தது. அதன் 100 வது நாளை லவ் டுடே படத்தின் குழுவினர் நேற்று கொண்டாடியுள்ளனர்
நவம்பர் 4 அன்று வெளியாகி பல இளசுகளை ஈர்த்த லவ் டுடே, பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய வசூலை குவித்தது. அதன் 100 வது நாளை லவ் டுடே படத்தின் குழுவினர் நேற்று கொண்டாடியுள்ளனர்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பல பெரிய நடிகர்களுடன் நடித்து முன்னனி நடிகையாக வலம் வரும் காஜல் இன்றுடன் தனது 16 ஆண்டு சினிமா வாழ்வை நிறைவு செய்து, 17 ஆம் ஆண்டில் கால் அடி எடுத்து வைக்கிறார்.
விஜய்யின் ரொமாண்டிக் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பின், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படப்படிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பிரபல பாலிவுட் நாயகியான ப்ரியங்கா சோப்ரா, லவ் அகேன் என்ற ஹாலிவுட் படத்தில் அவரின் கணவர் நிக் ஜோனஸுடன் நடித்துள்ளார்.
இன்று காலையில் இருந்து, அஜித் குமார் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. ட்விட்டரில், அஜித் குமாருடன் எடுத்த புகைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
முதல் மூன்று பாகங்களில் அனைவரையும் ஈர்த்த பீட்டர் பார்க்கர், தற்போது நான்காவது சீசனிலும் மக்களை கவரவுள்ளார். நோவே ஹோம் பாகத்தில் நடித்த அதே குழுவினர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
Background
சினிமாவை பார்க்காத மக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்க ஆரம்பித்த நாடகம் மருவி சினிமாவாக அவதாரம் எடுத்தது. காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சினிமா தற்போது வெப் சிரீஸ், ஓடிடி என லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல்
மாறியுள்ளது.
இந்தியா சினிமாவில், கோலிவுட், மாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ,பாலிவுட் என பல பிரிவினைகள் இருந்த நிலையில், தற்போது பான் இந்திய சினிமா என்ற புதியதோர் விடியல் ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பின மக்களும், மற்ற மொழி படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
கொரோனாவினால், தியேட்டரின் வணிகம் பாதிக்கப்பட்ட போது, ஓடிடி பட்டிதொட்டியெங்கும் பரவி ஹிட் அடித்தது. இப்போது திரையரங்குகளில்
படங்கள் வெளியாகினாலும், அதுவும் கொஞ்சம் நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகிறது. சில படங்கள், நேரடியாக ஓடிடியில் வெளியாகி மக்களை குதூகலித்து வருகிறது.
முதலில், ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை படங்கள் வெளியானது. ஆனால் இப்போது வாரத்திற்கு பல படங்கள் ரிலீஸிற்காக வரிசை கட்டி நிற்கிறது. பொழுதுபோக்கை தாண்டி பல சமூககருத்துக்களையும், அரசியலையும் பேசி வரும் சினிமா பற்றி செய்திகளையும், புது தகவல்களையும், நடிகர் நடிகையர் குறித்த தகவல்களையும் இந்த நேரலை அப்டேட்டில் பார்க்கவுள்ளோம்.
ஆகமொத்தம் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஏபிபி நாடு உங்களுக்கு உடனுக்குடன் வழங்கவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -