விஜய்யின் “GOAT" படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எப்போ தெரியுமா?


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "The Greatest of All Time"  படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பிகில் படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்  "The Greatest of All Time". மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்க பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா... திடீர் முடிவுக்கு என்ன காரணம்?


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஷபானா ஆர்யன் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தன் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களைக் கடந்து  ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'செம்பருத்தி' மூலம் ஷபனா புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்.


விஜய் ஆண்டனியின் காதல் கலாட்டா.. “ரோமியோ” படத்தின் விமர்சனம் இதோ!


விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இணைநது நடித்து இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் ரோமியோ. தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ் எனப் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். 35 வயதுக்கு பின் மிருணாளினி உடன் நடக்கும் திருமணத்தில் விவாகரத்து எண்ணங்களைக் கடந்து மனைவிக்கு பிடித்தது போல் மாற விஜய் ஆண்டனி மேற்கொள்ளும் முயற்சிகள் ரொமான்ஸ், காமெடி கலந்து சொல்லப்பட்டுள்ளது.


பாசக்கார கொடூரமான கேங்ஸ்டர்.. ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம் பட விமர்சனம்!


ஃபகத் ஃபாசில் நடிப்பில் 2 திரையரங்குகளில் இன்று ஆவேஷம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரோமன்சம் படம் மூலம் கவனமீர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தங்களை துன்புறுத்தும் காலேஜ் சீனியர்களிடம் இருந்து தப்பிக்க உள்ளூர் ரவுடியான ஃபஹத்தை நாடும் அப்பாவி மாணவர்களைக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.


வேலைக்கு லீவு எடுத்துதான் முதல் படத்திற்கு இசையமைத்தேன்: இன்ஸ்பெக்டர் ரிஷி இசையமைப்பாளர் அஸ்வத்


வேலைக்கு லீவு எடுத்துவிட்டு தனது முதல் படத்திற்கு இசையமைத்ததாக இசையமைப்பாளர் அஸ்வத் தெரிவித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.