திருமண செய்தியை அறிவித்த பிரபாஸ்? இன்ஸ்டாவில் பதிவு.. வாழ்த்தும் ரசிகர்கள்!


 டோலிவுட் தாண்டி பான் இந்திய நடிகராகக் கோலோச்சி வரும் நடிகர் பிரபாஸ் (Prabhas) அடுத்தடுத்த மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலிக்குப் பின் வெளியான அவரது படங்கள் பெரிதாகக் கைகொடுக்காவிட்டாலும், கடந்த ஆண்டு வெளியான சலார் படம் தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுத்தது. தற்போது அவர் நடித்து வரும் படம் கல்கி 2898. இந்நிலையில் தன் வாழ்வில் ஒரு ஸ்பெஷலான நபர் தன் வாழ்வில் வரவிருக்கிறார் என பிரபாஸ் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!


சந்தானம், பிரயாலயா ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இங்க நான் தான் கிங்கு’ மறைந்த நடிகர்கள் மனோபாலா, சேஷூ தொடங்கி தம்பி ராமய்யா, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தன்னுடைய திருமணத்துக்கு முன் தனக்கு சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சந்தானம், வீடு வாங்கியதால் ஏற்பட்ட கடனை எப்படி தன் திருமணத்தின் மூலமாகவே அடைக்கிறார் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும். 


தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!


உறியடி விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, தமிழ் இயக்கியுள்ள எலக்சன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்குள் நடைபெறும் விஷயங்கள்,  ஊருக்குள் ஏற்படும் சிக்கல்கள், இதனிடையே அரசியல் பற்றி தெரியாமல் அரசியலில் எண்ட்ரி கொடுக்கும் நாயகன், அதன் விளைவுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலைக் கொண்டே படம் நகர்வதால், இது சாதாரண மக்களுக்கும் நெருக்கமான கதையாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நான் ஓடும் குதிரை.. 4 வருஷத்துக்கு அப்புறம் பாராட்டு.. ஹிப்ஹாப் தமிழா ஆதி உருக்கம்!


கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் பிடி சார். இப்படத்தின் இசை ட்ரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த விழாவில் பேசிய ஹிப் ஹாப் ஆதி, “ஓடிக்கொண்டு இருக்கும் குதிரைக்கு இந்தப் பாராட்டுகள் எல்லாம் பெரிதாக தெரியாது. ஹிப்ஹாப் தமிழா கம்பேக் என்று சொல்லி வருகிறார்கள். ஒரு பார்வையாளனாக நான் இந்தப் படத்தைப் பார்த்து லேசாக கண் கலங்கிவிட்டேன்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.


மேலும் படிக்க: Vadivelu: வடிவேலு தொடவே கூடாது என கண்டிஷன்.. கோவை சரளா பண்ண சம்பவம் தெரியுமா?