Features Rich Bikes:  ரூ.3 லட்சம்  பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்களுடன், இந்திய சந்தையில் கிடைக்கும் டாப் 7 பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450:


இந்திய சந்தையில் ரூ.3 லட்சம் பட்ஜெட்டில், அதிகப்படியான சிறப்பம்சங்கள் நிறைந்த பைக்குகளில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 உள்ளது. இதில் பயனர் ஏபிஎஸ் ஆன்/ஆஃப் மற்றும் ஃபுல் மேப் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அணுகக் கூடிய, ஒரு வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது . இது ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்சையும் கொண்டுள்ளது.  பல்வேறு அம்சங்கள் நிறைந்த இந்த வாகனத்தின் தொடக்க விலை ரூ 2.85 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


யமஹா R15:


ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் இந்த  ஸ்போர்ட்ஸ் பைக்கானது,  ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், டிராக்ஷன் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்டர், ரைடிங் மோடுகள் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இடம்பெற்றுள்ளது. இது அழைப்பு/எஸ்எம்எஸ் அறிவிப்புகள் மற்றும் பல்வேறு செயலிகள் அடிப்படையிலான அம்சங்களை வழங்குகிறது. இந்த பைக் இந்தியாவில் ரூ.1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


டிவிஎஸ் அப்பாச்சி RR310:


தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த TVS Apache RR 310 ஒரு ஸ்போர்ட்டி டிசைனுடன் விற்பனை செய்யப்படுகிறது. செங்குத்துத் திரையை கொண்டுள்ள இந்த வாகனமானது, உங்கள் ஆவணங்களை ஒரு படத்தின் வடிவத்தில் சேமிக்கும் திறனை கொண்டுள்ளது. இது சவாரி முறைகள், புளூடூத்-இயக்கப்பட்ட இணைப்பு அம்சங்கள், ஒரு ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற பல அம்சங்களையும் பெற்றுள்ளது. இந்த பைக் ரூ.2.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


டிவிஎஸ் அப்பாச்சி RTR310


மேலே குறிப்பிட்ட RR ஐப் போலவே, RTR 310 ஆனது டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கட்டுப்பாடு, ஸ்டாப்பி கண்ட்ரோல், TPMS மற்றும் போன்ற பல ரைடர்-உதவி அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதனுடன், பைக் 5 இன்ச் டிஎஃப்டி திரையுடன் வருகிறது. இது பல அம்சங்களுக்கு வழ்வகை செய்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து, ரூ.2.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.


பஜாஜ் பல்சர் NS400Z:


பஜாஜ் பல்சர் NS400Z இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 400cc பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கில் ரைடிங் மோடுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏபிஎஸ் ஆன்/ஆஃப், கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றுடன் வருகிறது. இந்த பைக் இந்திய சந்தையில் ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வருகிறது.


யமஹா MT15:


யமஹா எம்டி15 எம்டி வரம்பில் மிகச்சிறிய பைக் ஆகும். ரூ. 1.72 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்கப்படும் இந்த பைக், டார்க் கண்ட்ரோல், ஏபிஎஸ் உள்ளிட்ட பல அம்சங்களுடன் புளூடூத் இணைப்பையும் கொண்டுள்ளது.  இது அழைப்பு எச்சரிக்கை மற்றும் பல அம்சங்களை செயல்படுத்துகிறது.


கேடிஎம் 250 டியூக்:


கேடிஎம் 250 டியூக் அதன் பெயருடன் உள்ள பெரிய பைக்குகளில் இருந்து உத்வேகத்தை பெறுகிறது. ரூ. 2.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக் குறியுடன், பைக் விரைவான-ஷிஃப்ட்டர், 5-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஏபிஎஸ் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை பெறுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI