அம்மாவை எந்நாளும் போற்றி வணங்குவோம்.. அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விஜய்!


இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜய் பகிர்ந்துள்ளார். 


ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?


தங்கள் பள்ளிக்காலம் தொடங்கி காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தமிழ் இசை உலகில் க்யூட்டான தம்பதியாக வலம் வருபவர்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதி. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில காலமாக பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் தங்களது திருமண முறிவை முறித்துக் கொள்ள உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


நயன்தாரா அம்மாவா எப்பவும் டாப்.. மகன்களை தோளில் தாங்கும் க்யூட் வீடியோ! விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!


அன்னையர் தினத்தில் தன் மனைவியும் பிரபல நடிகையுமான நயன்தாரா தன் இரட்டைக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்திருக்கும் க்யூட்டான தருணங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும்,  இந்த வீடியோவுடன் விக்னேஷ் ஷிவன் “ ஒரு அன்னையாக உனக்கு 10 க்கு 99 மதிப்பெண்கள் கொடுப்பேன். அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று அவர் கூறியுள்ளார். 


"அமீர் படத்துக்கு தடை விதிக்கனும்" கொந்தளித்த இயக்குனர் வராகி - காரணம் என்ன?


மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள “உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் அமீர் ஹீரோவாக நடிக்க, சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அரசியல் பகடியாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் எம்.ஜி.ஆரை கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாக இயக்குநர் வராகி தெரிவித்துள்ளார்.


வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு


நடிகர் ரஞ்சித் ஹீரோவாக நடித்துள்ள குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரட்சகன், ஸ்டார் படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் தற்போது பிரபல இயக்குநர்களாக விளங்கும் பா. ரஞ்சித், வெற்றிமாறன் இருவரையும் குறிப்பிட்டு இவர்கள் போன்ற இயக்குநர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்ட பிறகு தான் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது என்றும், சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது என்றும் பிரவீன் காந்தி கோபம் கொந்தளிக்கப் பேசியுள்ளார்.