பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் இணைந்த மிஸ்கின்!


கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தை இயக்குகிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். கல்லூரி கதையாக உருவாகும் டிராகன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூன் மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.டிராகன் படத்தில் இயக்குநர் மிஸ்கின் , கே.எஸ் ரவிகுமார் மற்றும் ஹர்ஷத் கான், விஜே சித்து உள்ளிட்டவர்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!


கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகிய கருடன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் செம பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் மக்களில் வரவு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் கருடன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. கருடன் படம் திரையரங்கில் வெளியான முதல் நாளில் உலகளவில் 4.2 கோடி வசூலித்தது. 


டைட்டிலுக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு.. வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு!


டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்திருக்கிறார்.சென்சார் போர்டில் படத்தின் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்படியான நிலையில் வடக்கன் படத்தின் பெயர் மாற்றப்பட்டு புதிய பெயர் “ரயில்” என சூட்டப்பட்டுள்ளது. 


சத்யராஜின் வெப்பன் முதல் வித்தார்த்தின் அஞ்சாமை வரை...ஜூன் 7 திரையரங்கில் வெளியாகும் படங்கள்


இனி ஒரு காதல் செய்வோம்,ஹரா,வெப்பன்,அஞ்சாமை ஆகிய படங்கள் ஜூன் முதல் வாரத்தில் திரையரங்குகளில் நான்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. 


Sasikumar: “இனிமேல் சூரி ஹீரோ தான்.. அவர் வளர்ச்சியை பார்த்து மகிழ்கிறேன்” - நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி!


துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். மேலும் சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி ஹரிப்பிரியன், மைம் கோபி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கருடன் படம் கடந்த மே 31 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தின் மூலம் சூரி நடிப்பில் வெறொரு பரிணாமம் அடைந்துள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.