"தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?


லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பல ஆண்டுகள் உழைப்பு மற்றும் பெரும் பட்ஜெட்டில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் தயாராகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது, முன்னதாக இந்தியன் 2 படத்தின் முன்னோட்டக் காட்சி, அனிருத் இசையமைத்த பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ட்ரெய்லர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 25ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


The Calm To Storm.. தி கோட் பட ஃபோட்டோவுடன் விஜய்க்கு நச் வாழ்த்து பகிர்ந்த த்ரிஷா!


தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தன் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில், தி கோட் பட லுக்கில் நடிகர் விஜய் தன்னுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை த்ரிஷா (Trisha) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தி கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ள நிலையில், “அமைதியில் இருந்து புயல். புயலில் இருந்து அமைதி.. இன்னும் பல மைல்கற்களை அடைய வாழ்த்துகள்” எனும் கேப்ஷனுடன் விஜய்யை வாழ்த்தியுள்ளார்.


தாத்தா, அப்பா வழி.. லண்டனில் நடிப்புப் பயணத்தை தொடங்கிய மகேஷ் பாபு மகன்.. அடுத்த ஹீரோ தயார்!


பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மகனும், நடிகர் கிருஷ்ணாவின் பேரனுமான கௌதம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளது டோலிவுட்டில் கவனமீர்த்துள்ளது. தன் குடும்பத்தினர் போலவே சிறு வயது முதலே நடிப்பு ஆசையுடன் வளர்ந்த கௌதம் தற்போது லண்டனில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன் முதல் மேடை நாடகத்தில் பர்ஃபார்ம் செய்து, தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்த அவரது தாய் நம்ரதா பகிர்ந்துள்ள புகைபடங்கள் வைரலாகியுள்ள நிலையில் விரைவில் கௌதம் வெள்ளித்திரையில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வரம்பை மீறியதையும் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் மனநல மையங்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசுக்கு எனது வேண்டுகோள். உடல் ரீதியாகவும் மன  ரீதியாகவும் தங்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையிலாவது குடிக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.